இந்தியாவுடன் மோதல்... பொருளாதாரமந்த நிலையில் சிக்கி தவிக்கும் பாக்...!! நிதி கொடுக்க வருகிறார் சவுதி இளவரசர்...??
இந்தியாவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, சவுதி இளவரசரின் வருகை நிதி உதவியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
பாகிஸ்தான் நாட்டுக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார், இரு நாட்டு நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது . காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சவூதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தி வந்த நிலையில், அதை சவுதி அரேபியா ஆரம்பத்தில் புறக்கணித்தது . காஷ்மீர் பிரச்சனை உச்சகட்டத்தில் இருந்தபோது இந்திய பிரதமர் மோடி, அமெரிக்கா , சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது இந்திய பிரதமரை சவுதி அரேபியா வரவேற்று உபசரித்து அவரின் திறமையை வெகுவாக பாராட்டியதுடன், இந்தியாவுடனான சவுதி அரேபியா உறவு வலிமையாக உள்ளது என அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது, இந்நிலையில் திடீரென காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு சுமார் 57 க்கும் அதிகமான இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இது பாகிஸ்தான் கொடுத்துவந்த அழுத்தத்தின் காரணமாக அரேபியா இவ்வாறு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் தகவலையும் சமீபத்தில் சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் சவுதி அரேபிய இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீது அல் நஹ்யான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளதாகவும், அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து சில உடன்பாடுகள் எட்டப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . இதற்கு முன்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அபுதாபி இளவரசர் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டிருந்தார் அப்போது பாகிஸ்தானுக்கு 300 கோடி டாலர் நிதி உதவி அளிக்கப்பட்டது இந்நிலையில் இந்தியாவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, சவுதி இளவரசரின் வருகை நிதி உதவியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .