கொரோனா பணியை பாராட்டி அளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்த மக்கள்..!! எதிர் கட்சிக்கு இவ்வளவுதான்..!!
ஜனநாயக கட்சி 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது , அதன் கூட்டணி கட்சியான பிளாட்பாரம் கட்சி 17 இடங்களை கைப்பற்றியது .
கொரோனா என்ற கொடிய வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தென்கொரிய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தென்கொரியாவின் ஜனநாயகக்கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது , அக்கட்சியின் தலைவர் அதிபர் மூன் ஜே இன் மீண்டும் அதிபராகியுள்ளார் . உலகம் முழுக்க ஊரடங்கு நிலை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தென் கொரியா, மிகப்பெரிய தேர்தலை நடத்தி அதன் முடிவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா என்ற கொடிய அரக்கனின் அச்சுறுத்தலையும் தாண்டி , தென்கொரிய மக்கள் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளது உலக நாடுகளையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது . உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இதுவரையில் இந்த வைரஸால் , 21 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதகமானோர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் உலக அளவில் ஒட்டு மொத்த மக்கள் இயக்கத்தையே முடக்கியுள்ளது, தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டுள்ளன , கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த கொரோனாவால் உலகமே செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றன. அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் பிரிட்டன் , பிரான்ஸ் , ஜெர்மனி , உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இந்த வரிசையில் கொரோனா மிகத்தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திய நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று , நாட்டில் இதுவரை 10 ஆயிரத்து 613 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் , 229 பேர் உயிரிழந்துள்ளனர் . ஆனால் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது . இங்கு வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது , சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா இருந்த போதும் , சமூக இடைவெளி , கொரோனா கண்காணிப்பு, முறையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது தென்கொரியா.
ஆனால் இதையெல்லாம் தாண்டி 300க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தலை தென்கொரியா நடத்தி காட்டியிருக்கிறது , தென்கொரிய ஜனநாயக் கட்சியும் , யுனைட்டட் பியுச்சர் கட்சியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன , கொரோனா அச்சத்திற்கும் மத்தியில் மக்கள் ஜனநாயகக் கடமையாற்றினார் , கடுமையான கோடை வெய்யிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தொற்றுநோய் அபாயத்திற்கும் மத்தியில் வாக்களித்தனர். மக்கள் வாக்குச்சாவடிகளின் திரண்டு கைகளில் கிருமி நாசினிகளால் சுத்திகரித்துக் கொண்டு பிளாஸ்டிக் கையுறைகளையும் முகமூடிகளையும் அணிந்து வாக்குகளை செலுத்தினர் . வைரஸ் அச்சம் காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருந்தவர்களுக்கு வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு வாக்குகள் பதியப்பட்டன . முதல்முறையாக 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கலாம் என அனுமதிக்கப்பட்டதால் ஏராளமான இளைஞர்கள் வாக்களித்தனர் .
கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த முறை 66 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் மொத்தம் 300 இடங்களில், அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஜனநாயக கட்சி 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது , அதன் கூட்டணி கட்சியான பிளாட்பாரம் கட்சி 17 இடங்களை கைப்பற்றியது . இதனால் ஆட்சியமைப்பதற்கு தேவையான 180 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது . யுனைட்டட் பியுச்சர் கட்சிக்கு மொத்தம் 103 இடங்கள் மட்டுமே கிடைத்தது, கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் மூன் ஜே இன் எடுத்த முயற்சிகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதையடுத்து அவருக்கு மக்கள் செல்வாக்கு உயர்ந்தது என்றும், ஜனவரி மாத இறுதியில் அவரின் மக்கள் ஆதரவு 41 சதவீத முதல் 57 சதவீதமாக உயர்ந்தது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.