சீனாவின் வுகான் நகரின் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கம், தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளை சீரழித்து வருகிறது. வல்லரசு நாடுகள் கூட மக்களை காக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாததால், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தொற்றை தடுத்து வருகின்றன. 

தென்கொரியாவில் சுமார் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தென்கொரியாவின் டாயிகு நகரில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த 51 பேர் குணடைந்துவிட்டதாக அறிவித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மீண்டும் அவர்களை மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குணமடைந்த 51 பேருக்கும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தென்கொரியாவில் உள்ள டேகு நகர தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனையில் பங்கேற்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மூலமாக கொரோனா பரவியது. அங்கு மட்டும் 6 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒருநாளைக்கு 900 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  வந்த நிலையில், தென்கொரியாவில் நேற்று இரவு வரை 27 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ராதிகா - சரத்குமார் பேத்திக்கு பெயர் வச்சாச்சு... என்ன பெயர் தெரியுமா?

சீனாவை அடுத்து தென் கொரியாவில் காட்டுத்தீ போல் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் இந்த செய்தி அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தென்கொரியாவின் மற்ற நகரங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் சமூக விலகலை முறையாக கடைபிடித்ததும், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளுமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த காரணம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.