பள்ளத்தாக்கில் தலைக்குப்புற பேருந்து கவிழ்ந்து விபத்து... 25 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு..!
தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு கேப் மாகாணம் பட்டர்ஒர்த் நகரில் இருந்து ஹிபி என்ற நகருக்கு 80-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து குவால்வினி என்ற மலைப்பாங்கான பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
தென் ஆப்பிரிக்காவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு கேப் மாகாணம் பட்டர்ஒர்த் நகரில் இருந்து ஹிபி என்ற நகருக்கு 80-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து குவால்வினி என்ற மலைப்பாங்கான பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர், பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 62 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக உடனே மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.