Asianet News TamilAsianet News Tamil

சீன முட்டாள்களுக்கு சொல்லி புரிய வையுங்கள்..!! ரத்தம் கொதிக்கும் ட்ரம்ப்...!!

இதற்கு தன் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , காட்டமாக டுவிட்டரின் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார் அதில் , உலக அளவில் சீனாவின் இயலாமையால் 

Some wacko in China just released a statement blaming everybody other than China for the Virus which has now killed hundreds of thousands of people.
Author
Delhi, First Published May 21, 2020, 6:22 PM IST

சீனா என்ற ஒற்றை நாட்டின் இயலாமையே உலகளவில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் . ஆனாலும் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சீனா தன்னைத் தவிற மற்ற எல்லா நாடுகளையும் குற்றஞ்சாட்டி வருகிறது என கடிந்துள்ளார்.  சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது . உலக அளவில் மொத்தம் 50 லட்சத்து 85  ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில்  சீனா வேண்டும் என்றே இந்த வைரசை பல நாடுகளுக்கு பரப்பியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது , இந்த  வைரசால் மற்ற நாடுகளைவிட ஒட்டு மொத்த  அமெரிக்காவும்  நிலைகுலைந்து போயுள்ளதே அதற்கு காரணம்.  

Some wacko in China just released a statement blaming everybody other than China for the Virus which has now killed hundreds of thousands of people.

இதுவரை அங்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் , அமெரிக்காவின் ஒட்டுமொத்த  பொருளாதாரமும் அதளபாதாளத்திற்கு சரிந்துள்ளது .  இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா எவ்வளவோ முயற்சிகளை செய்தும் அதில் பலன் இல்லை.  இன்னும் மக்கள் கொத்துக் கொத்தாக வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.  இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ள அமெரிக்கா தன் மொத்த கோபத்தையும் சீனா மீது காட்டிவருகிறது .  இந்த வைரசுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ,  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மாறி மாறி சீனா மீது புகார் கூறி வருகின்றனர். ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துவரும் சீனா , தங்கள் மீது வைக்கப்படும் புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என்றும்,   அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு  ட்ரம்ப் கூறும் அவதூறு குற்றச்சாட்டு என்றும் விமர்சித்து வருகிறது.  

Some wacko in China just released a statement blaming everybody other than China for the Virus which has now killed hundreds of thousands of people.

மேலும்  இது குறித்து தெரிவித்துள்ள  சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான்,  கொரோனா வைரஸ் சீனாவில்தான் தோன்றியது என யார் சொன்னது ,  இது எங்கு தோன்றியது என்பது யாருக்கும் தெரியாது. அந்த வைரஸ் சீனாவில் தென்பட்டதால்  அது சீனாவில் தோன்றிய வைரஸ் என சொல்ல முடியாது வைரசுடன் சீனாவை ஒப்பிடுவது ஏற்க முடியாது என கூறியுள்ளார்.  இதற்கு தன் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ,  காட்டமாக டுவிட்டரின் கருத்து ஒன்று  பதிவிட்டுள்ளார்  , அதில் ,  உலக அளவில் சீனாவின் இயலாமையால்  தான் இத்தனை லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் சீனாவின் இயலாமைதான்  ஆயிரக்கணக்கான மக்களை கொன்றுள்ளது .  சீனாவின் தவிர மற்ற அனைவரையும் சீனா குற்றம் சாட்டுகிறது.  சீனாவின் திறமையின்மை என்பதுதான்  இது அத்தனைக்கும் காரணம் என சீனாவில் உள்ள சில முட்டாள்களுக்கு யாராவது விளக்குங்கள்.  இது வேறு ஒன்றுமில்லை இது உலகளாவிய வெகுஜன படுகொலை என அவர் கண்டித்துள்ளார் . 

 

Follow Us:
Download App:
  • android
  • ios