உளவு பார்த்த 1500 போலி கணக்குகள் முடக்கம்.. அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது.
 

social media user alert

ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது.

மேலும் அதில், சுமார் 100 நாடுகளில் உள்ள பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 50,000 பயனர்கள் குறிவைக்கப்பட்டதாகவும் அவர்களின் தனிப்பட்ட செய்திகள், தகவல்கள் சேகரிப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மெடா வெளியிட்ட நிறுவனங்களில் பட்டியலில் பெகாசஸ் செயலியை உருவாக்கி என்.எஸ்.ஓ வும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபேஸ் புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகளில் உளவு பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சுமார் 1,500 பொய்கணக்குகளையும் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

social media user alert

மேலும் போலி கணக்குகளை தொடங்குவது, இலக்கு வைக்கப்பட்டுள்ளவருடன் நட்பு கொள்ளுவது, தகவல்களை சேகரிக்க ஹக்கிங் முறைகளை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் சைபர் கண்காணிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டதாகவும் மெடா குற்றச்சாட்டியுள்ளது. ஒரு மாத கால விசாரனையை தொடர்ந்து, ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமுக வலை தளங்களில் 1,500 க்கும் மேற்பட்ட கணக்குகள் மற்றும் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கண்காணிப்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் சார்பாக 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்களை குறிவைத்ததாகவும் மேற்கோள்காட்டியுள்ளது. மேலும் இந்த உளவு செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட பயனர்கள் குறிப்பிட்ட எந்த விதத்தில் பாதிக்கப்பட்டார் என்கிற விவரங்கள் வெளியிடப்படாமல், தானியங்கு  எச்சரிக்கை சமிக்ஞைகளை மட்டும் பெறுவர் என்றும் மெடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

social media user alert

இந்தியாவில் பெகாசஸ் செயலி ஆயிரக்கணக்கானோரை இலக்கு வைத்ததாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மெடா நிறுவனத்தின் இந்தை அறிக்கையில், கண்காணிப்புத் துறையில் விசாரணையை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios