அளவுக்கதிகமாக உப்பு உட்கொள்ளும் சிங்கப்பூரர்கள்! 10ல் 9 பேருக்கு உயர் ரத்த அழுத்தம்! ஆய்வில் தகவல்
சிங்கப்பூர் நாட்டினர் அதிகளவு உப்பை எடுத்துக்கொள்வதாக அதிர்ச்சியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 3ல் ஒருவருக்கு மேல் உயர் ரத்த அழுத்தம் காணப்படுவதாகவும் தேசிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் அண்மையில் வெளியான தேசிய சுகாதார, ஊட்டச்சத்து அறிக்கையின்படி, சிங்கப்பூர் நாட்டினர் உட்கொள்ளும் உப்பின் அளவு 2019ம் ஆண்டு 3,480 மில்லிகிராமில் இருந்து 2022ம் ஆண்டில் 3,620 மில்லிகிராமுக்கு அதிகமாக உட்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்படும் அதிகபட்ச உப்பின் அளவு 2,000 மில்லிகிராம் மட்டுமே.
மேலும், 2019ம் ஆண்டில் பரிந்துரைக்கப்படும் அளவைவிட அதிக கலோரிகளை உட்கொள்பவர்களின் விகிதம் 55 சதவீதமாக இருந்த நிலையில், 2022ம் ஆண்டில் 61 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உடற்பயிற்சி செய்வோரின் விகிதம் 2019ல் 84.6சதவீதத்திலிருந்து 2022ல் 74.9 சதவீதாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சர்க்கரை, உப்பு ஆகிய இரண்டும் அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படுவதை கட்டுப்படுத்த இன்னும் அதிக முயற்சிகள் தேவை என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான நடவடிக்கைகளில் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தனது அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்க்கரையின் அளவை குறிப்பிட்டு காட்டும் வகையில், ‘நியூட்ரி கிரேடு’ கட்டாயக் குறியீடு, இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும், உணவு பாக்கெட்டுகளில் உள்ள உப்பின் அளவை குறிக்கும் வகையில், இதேபோன்ற குறியீட்டை அறிமுகப்படுத்தும் சாத்தியகூறுகளை சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் ஒங் யி காங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் விரைவில் இரு கட்டங்களாக உயரப்போகும் தண்ணீர் கட்டணம்! முழு விபரம் உள்ளே!
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகை சுகாதார ஆய்வின்படி, 2010ம் ஆண்டில் 19.8% பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அது இப்போது 2022ம் ஆண்டில் 37% பேரை பாதித்துள்ளது. இதற்கு அதிகளவு உப்பு உட்கொள்ளள் காரணமாக இருக்கலாம் என்று தேசியப் பல்கலைக்கழக இதய நிலையத்தின் மூத்த மருத்துவ ஆலோசகர் டான் ஹுவே சீம் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த மக்களும் உப்பு உட்கொள்ளள் அளவை சிறிதளவு குறைத்தாலும், இரத்த அழுத்தத்தை கண்டிப்பாக குறைக்க முடியும் என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D