அரசு அதிகாரிகள் பெயரில் பல கோடி மோசடி.. மக்களே உஷார் - MAS மற்றும் சிங்கப்பூர் SPF வெளியிட்ட கூட்டறிக்கை!

Singapore MAS Officials : சிங்கப்பூர் காவல் படை (SPF) மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) நேற்று டிசம்பர் 21, 2023 அன்று ஒரு முக்கிய செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. 

Singapore MAS and SPF officials alerted peoples after new type of scam arising in singapore ans

அதில் கடந்த சில நாட்களாக "அரசு அதிகாரிகள் என்ற பெயரில் மக்களை நம்பவைத்து பல கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளதாக அதில் கூறியுள்ளது. மேலும் நேற்று வெளியான அந்த கூட்டறிக்கையில், கடந்த ஜனவரி 2023 முதல், இதுவரை 41 பேர் அந்த மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மொத்தம் S$2.6 மில்லியன் அளவிற்கு பணம் இழந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த மோசடி எப்படி நடந்தது?

முதலில் தங்களை வங்கி அதிகாரிகளைப் போல காட்டிக் கொண்டு சில மோசடி ஆசாமிகள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பின் அவர்களுடைய கணக்கிலிருந்து ஒரு கணிசமான தொகை வேறு ஒரு கணக்கிற்கு சென்றுள்ளதாகவும். அதுகுறித்து அவர்களுக்கு தெரியுமா? என்றும் போலியாக ஒரு பிம்பத்தினை உருவாக்கி முதலில் பாதிக்கப்பட்ட நபர்களை பயத்தில் அழுத்தி உள்ளனர். 

சிங்கப்பூரில் கொரோனா.. ஒரே வாரத்தில் 965 பேர் மருத்துவமனையில் அனுமதி - புதிய தகவலை வெளியிட்ட சிங்கை MOH!

தான் அந்த பண பரிவர்த்தனையை செய்யவில்லை என்று பாதிக்கப்பட்ட நபர் கூறியதும், உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம் தற்பொழுது எங்களது உயர் அதிகாரிக்கு உங்களது இந்த அழைப்பை மாற்றுகிறோம், அவர் உங்களுக்கு நிச்சயம் உதவுவார் என்று வேறொரு நபருக்கு அந்த அழைப்பை மாற்றியுள்ளனர். 

MAS (சிங்கப்பூரின் நாணய ஆணையம்) அதிகாரி போல தன்னை கட்டிக்கொண்டு அங்கு பேசும் அந்த மற்றொரு மோசடி ஆசாமி, அந்த பாதிக்கப்பட்டவரை மேலும் சில தகவல்களை கூறி பயமுறுத்தி இறுதியில் அவர்களது வங்கி கணக்கு "மணி லாண்டரிங்" செய்யும் கும்பலால் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆகவே இதை போலீஸ் அதிகாரிகள் தான் கையாள வேண்டும், என்று கூறி மீண்டும் அந்த அழைப்பை ஒரு SPF (சிங்கப்பூர் காவல்படை) அதிகாரிக்கு மாற்றுவதாக கூறி பேசி உள்ளார். 

இறுதியாக தன்னை SPF அதிகாரிகள் போல கட்டிக்கொண்டு பேசும் மோசடி ஆசாமி, உங்களுடைய கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாப்பான வேறு ஒரு SPF மற்றும் MAS கணக்கிற்கு மாற்றவேண்டும் என்று கூறி, அவர்களிடம் பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். ஆனால் தாங்கள் பணத்தை ஏமாந்து விட்டோம் என்றும் அவர்களுக்கு வெகு நேரம் கழித்து தான் தெரியவருகின்றது. 

உலக புகழ் பெற்ற நடிகர் மீது பாலியல் புகார்.. ஹோட்டல் அறையில் நடந்தது என்ன? - உதவியாளர் சொன்ன பகீர் தகவல்!

சிங்கப்பூரில் இப்பொழுது இந்த புதிய வகை மோசடி தலை தூக்க துவங்கியுள்ள நிலையில், அதுவும் அரசு அதிகாரிகளுடைய பெயரையே பயன்படுத்தி போலியான அழைப்புகள் வரும் இந்த சூழ்நிலையில் சிங்கப்பூர் மக்கள் மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற போலியான அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அப்படி இது போன்ற அழைப்புகளை ஏற்கும் பட்சத்தில் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் நேற்று டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர் MAS மாற்றும் SPF அதிகாரிகள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios