கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் உலகமே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. கொரோனா என்ற வார்த்தை உலகையே ஒருநாள் அசைத்து பார்க்கும் என்று இதற்கு முன்பு சொல்லி இருந்தால் நாம் நம்பியிருப்போமா?... ஆனால் இன்று வைரஸ் தொற்றுக்கு பயந்து உலக நாடுகளே தங்களது மக்களை வீட்டிற்குள் இருக்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளன. 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

வல்லரசு முதல் ஏர்போர்ட்டே இல்லாத குட்டி நாடு வரை அனைத்தையும் கொரோனா வைரஸ் தும்சம் செய்து வருகிறது. இந்த கொடிய நோயிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அனைத்து நாடுகளும் போட்டி, போட்டுக்கொண்டு மருந்து கண்டுபிடித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: தினமும் 5 ஆயிரம் பேருக்கு வயிராற சாப்பாடு... சைலன்டாக சேவை செய்யும் பிரபல நடிகை...!

தற்போதைய நிலவரத்தின் படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 965 பேராக உயர்ந்துள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ், இதுவரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 330 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 1 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: "கொரோனாவால் அப்பா இறந்துவிட்டார்; அம்மா சீரியஸா இருக்காங்க"... சோகம் தாங்காமல் துடிக்கும் பிரபல நடிகர்...!

ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உலக நாடுகள் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவிற்கு குறைத்து கூறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சார்ஸ், எபோலாவைப் போல் இல்லாமல், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சில காலத்திற்கு நார்மலாகவே இருக்கிறார்கள். அப்போது அவர்களது தும்மல் அல்லது இருமலின் போது நோய் கிருமி பரவ ஆரம்பிக்கிறது. இப்படி ஒருவருக்கு பாதிப்பு உள்ளதா? என்று கண்டறியும் முன்னரே பலருக்கும் பரவிவிடுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கு வைத்துக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.