பாக். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்வு... இன்று பதவியேற்பு!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார். 

shehbaz sharif elected new prime minister

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதில், இம்ரான் கான் அரசுக்கு தோல்வியடைந்தது. இதை அடுத்து பிரதமர் இல்லத்தில் இருந்து இம்ரான் கான் வெளியேறினார். 342 உறுப்பினர்களில், 174 பேர் இம்ரான் கானுக்கு எதிராக ஓட்டு போட்டனர். பாகிஸ்தான் வரலாற்றில், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த முதல் பிரதமர் என்ற பெருமை இம்ரான் கானுக்கு கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்றம் கூடியது.

shehbaz sharif elected new prime minister

இந்நிலையில் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் நிறுத்தப்பட்டார். இதற்காக அவர் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், அரசியல் சாசனத்தை காக்க ஒற்றுமையுடன் இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்திருந்தார். இதனிடையே, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில், ஷா மெக்மூத் குரேஷியை பிரதமர் பதவிக்கு களமிறக்கினார். இம்ரான் கான் பெரும்பான்மை இழந்ததை அடுத்து அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

shehbaz sharif elected new prime minister

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்பை நியமிக்கும்படி, எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் இன்று, தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்றத்தில், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக எம்பிக்கள் ஒன்று கூடினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாப் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்க உள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios