கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வீடுகளை கொடுக்க உத்தரவு.. சீன மக்கள் அதிர்ச்சி..
சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ஷாங்காய் நகரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, வீடுகளை ஒப்படைக்க பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ஷாங்காய் நகரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, வீடுகளை ஒப்படைக்க பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ஷாங்காய் நகரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, வீடுகளை ஒப்படைக்க பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொருளாதார நகரமான ஷாங்காயில் அதிகளவு பாதிப்புகள் பதிவாகின்றன. சீனாவில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 27 ஆயிரம் பேர் ஷாங்காயை சேர்ந்தவர்கள்.
கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடுமையான ஊரடங்கு கட்டுபாடுகளை சீன அரசு விதித்துள்ளது. இதனால் நெரிசல் மிகுந்த நகரமான ஷாங்காய் வெறிச்சோடி காணப்படுகிறது. 25 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ளனர். லாக்டவுன் நீடிப்பதால், தொழிற்சாலை உற்பத்தி, சப்ளை ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் தாமதமாக வருவதால் தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகுவதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலே அடுத்தடுத்த எல்லாருக்கும் விரைவாக பரவுவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கை சீன அரசு எடுத்து வருகிறது. ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.
மேலும் தொற்று அதிகரிப்பினால் நகரில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் வீடுகளை சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்ற ஷாங்காய் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவர்களது வீடுகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று, அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மக்களை போலீசார் மிரட்டும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ'க்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சீன மக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுப்பட்டு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
தொற்று கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பு - 1,74,868 ஆகவும் கொரோனா பலி - 24,878 ஆகவும் உள்ளது. இந்நிலையில் சீனாவில் நேற்று மட்டும் 3,472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷாங்காயில் மட்டும் 3,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்திருப்பதை அடுத்து அங்கு கடுமையான ஊரடங்கு விதிகள் அமலுக்கு வந்துள்ளன.இதனால் சுமார் 25 மில்லியன் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.