Asianet News TamilAsianet News Tamil

கொரோனா இரண்டாம் அலை உருவானது... மீண்டும் முழு ஊரடங்கு அமல்..!

பிரான்சில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவுவதால் வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

second wave of coronavirus..France announces curfew
Author
Paris, First Published Oct 15, 2020, 7:27 PM IST

பிரான்சில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவுவதால் வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் 7.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 32,942  பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிலையில், பாரிஸ், லில்லி, லியோன், மார்சில்லி, துலூஸ் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

second wave of coronavirus..France announces curfew

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முக்கிய நகரங்களில் சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.  இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊடரங்கு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios