பயணிகளிடம் இருந்து பல லட்சம் திருட்டு.. விமானத்தில் பலே வேலை பார்த்த ஆசாமி - சிங்கப்பூரில் சிக்கியது எப்படி?
Scoot Flight Singapore : வியட்நாமில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஸ்கூட் விமான பயணத்தின்போது, மூன்று சக பயணிகளிடம் இருந்து சுமார் S$31,000 (US$23,260) அளவிலான பணத்தை ஒருவர் திருடியுள்ளார்.
Zhang Xiuqiang என்ற அந்த 52 வயதான சீன நாட்டவர், சிங்கப்பூர் கட்டுப்பாட்டில் உள்ள விமானங்கள் மீதான குற்றங்களுக்காக டோக்கியோ கன்வென்ஷன் அடிப்படையிலான சட்டத்துடன் இன்று திங்களன்று (டிசம்பர் 18) ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று திருட்டு குற்றச்சாட்டுகளை முன்னிட்டு ஆஜர் படுத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளனார்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, கடந்த டிசம்பர் 16ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஸ்கூட் TR305 விமானத்தில் பயணித்தபோது ஜாங் என்ற அந்த நபர் மூன்று பேரிடம் திருடியுள்ளார். ஹோ சி மின் நகரில் இருந்து சாங்கி விமான நிலையத்திற்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டான் சின் குவாங் என்ற நபருக்கு சொந்தமான ஒரு கருப்பு ஹேர்சாக் பையில் இருந்து சுமார் S$50 மற்றும் 510 மில்லியன் வியட்நாம் டாங் (S$28,000) பணத்தை ஜாங் திருடியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் பார்க் ஷெல் என்பவருக்கு சொந்தமான சாம்பல் நிற பையில் இருந்த ஒரு உறையில் இருந்து, US$1,000 மற்றும் S$930 மற்றும் லிம் ஜானஸ் என்ற நபரின் முதுகுப்பையில் இருந்து S$600 மற்றும் 3 மில்லியன் வியட்நாமிய டாங்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
பயணிகள் அளித்த புகாரில் நடத்தப்பட்ட சோதனையில் ஜாங் கைது செய்யப்பட்டார். தற்போது விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்பட்ட அவர் மீண்டும் வருகின்ற டிசம்பர் மாதம் 22ம் தேதி அன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக திரும்புவார். திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஒரு குற்றச்சாட்டிற்கு மூன்றாண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.