ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து வரவேற்றனர். அதன் பிறகு அவர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மேடையை நோக்கி நகர்ந்தனர்.
சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது, பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையே நல்ல நட்பு காணப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இந்தக் காட்சியை அமைதியாக நின்று கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார். பிரதமர் மோடியும், புடினும் பேசிக்கொண்டே முன்னோக்கிச் செல்லும்போது, அவர் ஷாபாஸைப் பார்க்கக்கூட இல்லை. இரு தலைவர்களும் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தனர்.

உச்சி மாநாட்டின் சந்திப்பின் போது பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பை முற்றிலும் விலக்கி வைத்தார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஷாபாஸ் ஷெரீப் முதல் முறையாக பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்தித்துள்ளார். ஆனால் பிரதமர் அவரை முற்றிலுமாக புறக்கணித்துள்ளார். மாநாட்டில் புடின், பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் மூன்று தலைவர்களுடனும் நட்புடன் நெருக்கமான சந்திப்பை நடத்தினர்.
ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து வரவேற்றனர். அதன் பிறகு அவர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மேடையை நோக்கி நகர்ந்தனர். பிரதமர் மோடி, புடின், ஜின்பிங் ஆகியோர் சுமார் இரண்டு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, மூன்று தலைவர்களும் சிரித்துக் கொண்டிருந்தனர். பிரதமர் மோடிக்கும், ரஷ்ய அதிபர் புடினுக்கும் இடையிலான இந்த பேச்சு அவர்களின் இருதரப்பு சந்திப்புக்கு முன்பு நடந்தது.
வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி , ‘‘பிரதமர் உச்சிமாநாட்டின் முழுமையான கூட்டத்தில் உரையாற்றுவார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொலைநோக்கை அவர் கோடிட்டுக் காட்டுவார்' என்று கூறியிருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார். அதன் பிறகு அவர் இந்தியாவுக்குப் புறப்படுவார்.
இந்த அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். 2024 அக்டோபரில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது கசானில் நடந்த கடைசி சந்திப்பிலிருந்து இருதரப்பு உறவுகளில் நேர்மறையான வேகத்தையும் நிலையான முன்னேற்றத்தையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். இரு நாடுகளும் போட்டியாளர்கள் அல்ல. வளர்ச்சி பங்காளிகள். அவர்களின் வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் அவர்கள் உறுதிப்படுத்தினர். பரஸ்பர மரியாதை, பரஸ்பர ஆர்வம் மற்றும் பரஸ்பர உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு நிலையான உறவு, ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடியும் ஜின்பிங்கும் அழைப்பு விடுத்தனர். இது இரு நாடுகளின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கும், 21 ஆம் நூற்றாண்டின் போக்குகளுக்கு ஏற்ப பல துருவ உலகம் மற்றும் பல துருவ ஆசியாவிற்கும் அவசியம்.
