சௌதி இளவரசர் ஏமன் எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்தில் பலி
சௌதி அரேபியாவின் மூத்த இளவரசர் ஒருவர், சௌதி - ஏமன் எல்லை அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்துள்ளார்.
சௌதி அரேபியாவின் முன்னாள் பட்டத்து இளவரசரின் மகன், இளவசரசர் மன்சூர் பின் மோக்ரன் என்பவர். இவர், ஆசிர் மாகாண துணை ஆளுநராகப் பதவி வகித்து வந்தார். அவர், அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். ஏமன் நாட்டு எல்லை அருகே சென்ற போது இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில் இளவரசர் மன்சூர் பின் மோக்ரன் உயிரிழந்து விட்டதாக அல்-இக்பார்யா செய்தி சேனல் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
விபத்து நடந்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தத் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. விபத்தில் சிதிலமடைந்த ஹெலிகாப்டரின் பாகங்கள் திங்கள் கிழமை இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் யாரும் உயிருடன் உள்ளார்களா என்று தேடும் பணி நடப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.