அதிர்ச்சி.. கழிவறையில் சமைக்கப்பட்ட சமோசா.. 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட இறைச்சி.. மூடப்பட்ட உணவகம்..

சவூதி அரேபியாவில் உணவகம் ஒன்றில் ஊழியர்கள் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா உள்ளிட்ட உணவு பண்டங்களை தயாரித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். 

Saudi Arabia Restaurant Shut Down For Preparing Samosa In Toilet For 30 years

சவூதி அரேபியாவில் உணவகம் ஒன்றில் ஊழியர்கள் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா உள்ளிட்ட உணவு பண்டங்களை தயாரித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். ஜித்தா நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள உணவகத்தில், மிக மோசமான வகையில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதாக நகராட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் உணவகத்திற்கு சென்று சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில் , உணவகத்தில் கலாவதியான இறைச்சி, சீஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அந்த உணவுபொருட்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும் உணவகத்தில் கழிவறையில் சமோசா உள்ளிட்ட திண்பண்டங்கள், சிற்றுண்டி தயாரித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனிடையே சமையல் செய்யும் இடம் மிக மோசமான வகையில் காணப்பட்டதாகவும் பூச்சிகளும் எலிகளும் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.30 வருட பழமையான உணவகத்தின் பணியாளர்களிடம் சுகாதார அட்டைகள் இல்லை என்றும் குடியிருப்பு சட்டத்தை மீறியுள்ளனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

பாதுகாப்பற்ற முறையில் உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ததாக, அந்த உணவகத்தை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். இதற்கிடையில், இந்த நகரில் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக உணவகம் மூடப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஜனவரி மாதம், ஜித்தாவில் பிரபலமான ஷவர்மா உணவகம் மூடப்பட்டது.  ஏனெனில் அங்கு உணவு தயாரிக்கும் இடத்தில் எலி சுற்றித் திரிவதையும், ஷவர்மா ஸ்கேயூரில் இறைச்சியை சாப்பிடுவதையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உணவகத்தை மூடி நடவடிக்கை எடுத்தனர். பிரபல உணவகத்தில் ஷவர்மா ஸ்கேயூரில் எலி இருக்கும் வீடியோ, அதிகளவில் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த வீடியோ மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அப்போது 2,833 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதில் 43 விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகவும், 26 உணவுகள் மூடப்பட்டதாகவும் நகராட்சி தெரிவித்தது. இந்நிலையில் உணவகத்தில் தின்பண்டங்கள் கழிவறையில் சமைக்கப்படுவதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் மூடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios