கொரோனாவுக்கு சமாதி... ரஷ்யாவுக்கு போட்டியாக களத்தில் சீனா: டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி ரெடி...!!
பரிசோதனைக்காக தடுப்பூசி 2 அளவுகளில் எடுக்கப்பட்டுள்ளது, ஒரு வருடத்தில் 10 கோடி தடுப்பூசிகள் சீனாவில் தயாரிக்க முடியும். தடுப்பூசியின் இரண்டு அளவுகளின் விலை 1000 யுவான் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 10 ஆயிரத்து 700 ரூபாய் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீன மருந்து நிறுவனமான சினோபார்ம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடந்து வருவதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை சினோபார்ம் தலைவர் லீயு ஜின்ஜெங் தெரிவித்துள்ளார்.ரஷ்யா அதிரடியாக தடுப்பூசி அறிவித்து, அதை விற்பணைக்கு கொண்டுவர உள்ள நிலையில் சீனா இந்த்தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் கொத்துக்கொத்தாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்பதால், அதற்கான ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சீனா இந்த ஆராய்ச்சியை அதி தீவிரமாகவும், வேகமாகவும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீன மருந்து நிறுவனமான சினோ ஃபார்ம், இந்த ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள், கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டு கொடுத்துள்ள சினோபார்ம் தலைவர் லியு ஜிங்ஜென் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி நடப்பாண்டில் விற்பனைக்கு வந்துவிடும். எங்கள் நிறுவனம் இரண்டு தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதித்து வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 22 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதற்கிடையே தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் சீனாவிலும் நடந்து வருகிறது. அதேபோல் சீனா ஆராய்ச்சியாளர்களும், நிர்வாகிகளும், தற்போது பரிசோதனையில் உள்ள தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
பரிசோதனைக்காக தடுப்பூசி 2 அளவுகளில் எடுக்கப்பட்டுள்ளது, ஒரு வருடத்தில் 10 கோடி தடுப்பூசிகள் சீனாவில் தயாரிக்க முடியும். என்ற அவர், தடுப்பூசியின் இரண்டு அளவுகளின் விலை 1000 யுவான் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 10 ஆயிரத்து 700 ரூபாய் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சீனாவில் இத்தடுப்பூசி விலை குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர். சீன சமூக ஊடக தளமாக சீனா வெய்போவில் பலர் இந்த விலை சீனாவின் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் அதிக விலை ஆகும், இதை அவர்களால் வாங்க முடியாது என்றும் எழுதி வருகின்றனர். மொத்தத்தில் உலக அளவில் 200 தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் உள்ளன அதில் 20 தடுப்பூசிகள் மனித பரிசோதனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.