russya bomb blast


ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், ரஷிய தேசிய தீவிரவாத தடுப்பு குழு தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இரண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று நண்பகல் ரெயில் சுரங்கப்பாதையில் வந்து கொண்டு இருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பு காரணமாக ரெயில் நிலையங்கள் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

10 பேர் பலி

இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தையடுத்து, பீட்டர்ஸ்ஸ்பர்கில் உள்ள 3 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விசாரணை

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. குண்டுவெடிப்புக்கான காரணம், பின்புலம் தீவிரவாத செயல் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்காஷேங்கோ, புதின் இடையிலான சந்திப்பு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறவிருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள்?

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஒரு பிரிவான செசன் தீவிரவாதிகள் நீண்ட காலமாகவே ரஷியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்து வந்தனர். சிரியாவில் அதிபர் பசா அல் அசாத்துக்கு ஆதரவாக ரஷிய படைகள் களம் இறங்கி, ஐ.எஸ். தீவிரவாதிககளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக போரிட்டுவருவதால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.