நிற்க முடியாத அளவு கால்களில் நடுக்கம்... அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ...!
உடல்நிலை சீராக இல்லை என்பதால், பொது வெளியில் நீண்ட நேரம் தோன்றுவதை தவிர்க்குமாறு அதிபர் விளாடிமிர் புதினுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடம்பெற்று இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை பற்றிய கவலைகளை அதிகரித்து உள்ளது. அதிபர் விளாடிமிர் புதின் கிரெம்லினில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், அதிபர் புதினின் கால்கள் நடுங்குவது, நிற்பதற்கே சிரமப்படுவது தெளிவாக பதிவாகி உள்ளது.
69 வயதான அதிபர் விளாடிமிர் புதின் திரைப்பட இயக்குனர் நிகிதா மகாய்லோவுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. விழா மேடையில் நின்று கொண்டிருக்கும் போது தான் அதிபர் விளாடிமிர் புதின் கால்கள் நடுங்குவது காணப்பட்டது. உடல்நிலை சீராக இல்லை என்பதால், பொது வெளியில் நீண்ட நேரம் தோன்றுவதை தவிர்க்குமாறு அதிபர் விளாடிமிர் புதினுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுப் பயணம்:
உலகளவில் அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் மற்றும் பகீர் கிளப்பும் தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான தகவல் ஒன்றில் அதிபர் புதினின் கழிவை சேகரிக்க தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இவர் அதிபர் விளாடிமிர் புதின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் இருக்கும் போது, அவரின் சிறுநீர் மற்றும் கழிவை சேகரித்து அங்கிருந்து மாஸ்கோ கொண்டு வந்து அழித்து விடுவார் என கூறப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது அதிபர் விளாடிமிர் புதினின் கழிவுகளை கொண்டு அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரங்கள் தீயவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் வெளியான மற்றொரு தகவல்களின் அதிபர் விளாடிமிர் புதினுக்கு இரத்த புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
உடல்நிலை பாதிப்பு:
இது மட்டும் இன்றி அதிபர் விளாடிமிர் புதின் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. மே மாத வாக்கில் அதிபர் விளாடிமிர் புதின் பொது வெளியில் இருமியது மற்றும் கால்களில் போர்வை போர்த்திக் கொண்டு அமர்ந்த சம்பவங்கள் அவரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை உணர்த்தும் வகையிலேயே பார்க்கப்பட்டது.
எனினும், ரஷ்யா அதிகாரிகள் அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நலம் பற்றிய தகவல்களை வழங்க மறுத்து விட்டனர்.