ஐசியுவில் இங்கிலாந்து பிரதமர்...!! உள்ளத்தால் உடைந்து போன ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்..!!
இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்த அவர் தனக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் மெல்லமெல்ல குணமாகி வருகிறது , விரைவில் இதிலிருந்து விடுபட்டு உங்களை சந்திக்கிறேன் ஆனால் வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் தென்படுகிறது என ஒரு கூறியிருந்தார்.
அவரது நம்பிக்கையும் அவரது நகைச்சுவை உணர்வும் அவர் இந்த வைரஸில் இருந்து மீண்டுவர உதவி செய்யும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் . இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா அறிகுறிகளுடன் கடந்த 10 தினங்களுக்கு முன் தன்னை தனிமைப்படுத்திக்க கொண்டார், இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதனையடுத்து உலகத்தலைவர்கள் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர் .
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் இந்த வைரசால் உலக அளவில் அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் , ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஜப்பானிலும் அந்த வைரஸ் காட்டுத்தீயாக பரவி வருகிறுது . இந்நிலையில் இந்த வைரஸ் இங்கிலாந்திலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது , அதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக தனக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது என கூறி இங்கிலாந்து டவுன் வீதியிலுள்ள அரசு இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார், இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்த அவர் தனக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் மெல்லமெல்ல குணமாகி வருகிறது , விரைவில் இதிலிருந்து விடுபட்டு உங்களை சந்திக்கிறேன் ஆனால் வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் தென்படுகிறது என ஒரு கூறியிருந்தார்.
இந்நிலையில் திடீரென அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது , இதனால் அதிர்ச்சி அடைந்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள் , போரிஸ் ஜான்சன் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர் . இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியுள்ளார், அதில், அவரின் நம்பிக்கை மற்றும் நகைச்சுவை உணர்வு அவரை இந்த வைரஸில் இருந்து மீண்டுவர அவருக்கு உதவும் . விரைவாக இதில் இருந்து அவர் மீண்டு வருவார் இந்த கடினமான தருணத்தில் என்னுடைய நேர்மையான ஆதரவை நான் தெரிவிக்க விரும்புகிறேன் , உங்கள் ஆற்றல் உங்கள் நம்பிக்கை உங்கள் நகைச்சுவை உணர்வு ஆகியவையும் இந்த நோயை தோற்கடிக்க உதவும் என நான் நம்புகிறேன் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் , பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.