அடி தூள், கொரோனாவுக்கு சமாதி..!! ரஷ்ய ஆராய்ச்சி நிறுவனம் அதிரடி..!!
1990 களின் பிற்பகுதியில் ஜப்பானிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, பின்னர் இது புஜிஃபில்ம் நிறுவனத்தால் வாங்கப்பட்டது,
பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகள் அவிஃப்வீரை சற்று மாற்றியமைத்துள்ளனர் என்று ஆர்.டி.ஐ.எஃப் தலைவர் கிரில் டிமிட்ரிஜ் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அடுத்த ஒருவார காலத்திற்குள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் மருந்து வழங்கப்படுமென ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா இதன் மூலம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை 64 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், இதுவரை சுமார் 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. கொரோனா வைரஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உலகமே கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான ஆராய்ச்சிகள் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது, இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் அதைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தீவிரம்காட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ரஷ்யாவின் பிரபல மருந்து ஆராய்ச்சி நிறுவனமான ஆர்டிஐஎப் நிறுவனத்தின் தலைவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :- இதுவரை covid-19 க்கு தடுப்பூசி தயாரிக்கப்படவில்லை, இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதற்கான மருந்து ஒன்று தயாராக உள்ளது. அவிஃபாவிர் என்றழைக்கப்படும் இந்த மருந்து அடுத்த வாரம் முதல் ரஷ்ய மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஃபெவிபிர்விர் என்றும் அழைக்கப்படும் அவிஃபாவிர் முதன்முதலில் 1990 களின் பிற்பகுதியில் ஜப்பானிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, பின்னர் இது புஜிஃபில்ம் நிறுவனத்தால் வாங்கப்பட்டது,பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகள் அவிஃப்வீரை சற்று மாற்றியமைத்துள்ளனர் என்று ஆர்.டி.ஐ.எஃப் தலைவர் கிரில் டிமிட்ரிஜ் தெரிவித்தார்.
அதன் திருத்தங்கள் குறித்த விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் பகிர்ந்து கொள்ள மாஸ்கோ தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். திருத்தம் செய்யப்பட்ட இந்த மருந்து சுமார் 330 பேரிடம் பரிசோதனை செய்ததில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 4 நாட்களுக்குள் குணமடைவது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவார காலத்திற்குள் இந்த சோதனை முழுமையாக நிறைவடையும் என்ற அவர், சிறப்பான, விரைவான நடைமுறையின் கீழ் மருந்து பயன்படுத்த சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என கூறினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாஸ்கோ விரைவில் தெரிவிக்கும் என்றும், முதற்கட்டமாக ஒரு மாத காலத்திற்குள் சுமார் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப் போதுமான மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் என கிரில் டிமிட்ரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் அவிஃப்வீரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.