எண்ணி இரண்டே மாதங்களில் கொரோனாவுக்கு சமாதி...!! அசுரவேக ஆராய்ச்சியில் ரஷ்யா..!!
அது அதிகாரபூர்வமற்ற ஒரு சோதனையில் வெற்றி பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள பாவிபிராவிர் மருந்து நிறுவனம் அரேப்லிவிர் என்ற பெயரில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது .
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருந்து ஒன்றை ரஷ்யா தயாரித்துள்ளதாகவும் அடுத்த இரண்டுமாத காலத்திற்குள் அதற்கான முழு பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது . கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , உலகம் முழுக்க 55 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைராசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் மூன்று லட்சத்து 46 ஆயிரமாக உயர்ந்துள்ளது . இந்ந வைரசால் அமெரிக்கா , ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட போது, ரஷ்யாவில் கொரோனா தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிரம் காட்டிவரும் கொரோனாவால் அங்கு மக்கள் கொத்துக் கொத்தாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் . இதுவரையில் மூன்று லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . சுமார் 3500 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக அளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
ரஷ்யாவும் வேகவேகமாக மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் , கிட்டதட்ட 40 வகையான தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடைமுறையில் உள்ளதாகவும் , அதில் குறைந்தது 14 தடுப்பூசிகள் கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயல்படும் வகையில் உருவாகும் என நம்புவதாகவும் அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் . சமீபத்தில் ரஷ்யாவின் மருந்து ஆராய்ச்சி குறித்து தெரிவித்த அந்நாட்டின் துணை பிரதமர் டட்டியானா கோலிகோவா , ரஷ்யாவில் மொத்தம் 3.1 பில்லியன் ரூபிள் கொரோனா மருந்து ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ரஷ்ய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்குள் ரஷ்யாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாராகும் என்றும், கொரோனா வைரசை எதிர்த்து சிறப்பாக போராடும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
அது அதிகாரபூர்வமற்ற ஒரு சோதனையில் வெற்றி பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள பாவிபிராவிர் மருந்து நிறுவனம் அரேப்லிவிர் என்ற பெயரில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது . இந்த மருந்து பரிசோதனைகள் அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டுவிடும் எனவும் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை சிறுநீரக மருத்துவரும் இந்த மருந்து ஆராய்ச்சிக்கு பொறுப்பேற்றுள்ள நிபுணருமான டிமிட்ரி புஷ்கர் கூறியுள்ளார். மேலும் மருந்து பரிசோதனை நிறைவு பெற்றவுடன் மருந்தை பதிவு செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கப்படும் என்றும் ,இந்த மருந்தினை மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படும் என்றும் , அத்துடன் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், மார்டோவியாவிலும் இந்த மருந்தை பரிசோதிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இன்னும் இந்த மருந்து தீவிர நோயாளிகளுக்கு கொடுக்கப்படவில்லை , இதில் இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளது, ஒரு தடுப்பூசி உருவாவதற்குள் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.