Ukraine-Russia War: ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும்... எச்சரிக்கை விடுக்கும் புடின்!!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்தால், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

russia warns that there will be direct war with nato if it joins ukraine

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்தால், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது.

russia warns that there will be direct war with nato if it joins ukraine

அதன்படி போர் நிறுத்தப்பட்ட இருந்த நிலையில் தற்போது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனிடையே உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்தால், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனின் ஆயுதக் கிடங்குகள், வெடிமருந்துக் கிடங்குகள், விமானப் போக்குவரத்து, வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட உக்ரைனின் முக்கிய ராணுவ உள்கட்டமைப்பை அழிக்கும் பணியை ரஷ்யப் படைகள் நிறைவு செய்துள்ளன. குறிப்பாக ரஷ்யப் படைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றும். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை திட்டம் எங்களது திட்டமிடல்படி தொடர்கிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளானது, எங்களுக்கு எதிரான போர் அறிவிப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

russia warns that there will be direct war with nato if it joins ukraine

அதற்காக ரஷ்யாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவது முடிவு எடுக்கப்படவில்லை. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்தால், அந்நாடு கீவ் நகரை முழு ராணுவ முகாமாக மாற்றும். கிரிமியாவிற்குள் உக்ரைன் நுழையும். இதனால் ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்படும். உக்ரைன் வான் பகுதியை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலமாக மூன்றாம் தரப்பு நாடுகள் அறிவித்தால், அந்த நாடுகள் ஆயுத மோதலில் பங்கேற்பதாக ரஷியா கருதும். அந்த நொடியே, நாங்கள் அவர்களை ராணுவ மோதலின் பங்கேற்பவர்களாக கருதுவோம். அவர்கள் எந்த உறுப்பினர்களாக இருந்தாலும் கவலையில்லை என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios