Russia Ukraine War: உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா..? அதிபர் புதின் திடீர் அறிவிப்பு..

Russia Ukraine War: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர்  புதின் தெரிவித்துள்ளார். 

Russia Ukraine War Updates

நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போர் இரண்டு வாரங்களாக நீடித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். போரினால் இருதரப்பிலும் சேதங்கள், உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போரில் இதுவரை 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

ரஷ்யா - உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டத்தின் கீழ் இந்தியா மீட்டு வருகிறது. இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இத்திட்டத்தின் மீட்கப்பட்டு தாய்நாடு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். உக்ரைனின் முக்கிய நகரங்களை தொடர்ச்சியாக சுற்றிவளைத்து கைப்பற்றி வரும் ரஷ்ய படை, அங்குள்ள செர்னோபில் அணுமின் நிலையைப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

உக்ரைனிலிருந்து 15 லட்சத்குக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா.தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே இதுவரை நடைபெற்ற மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.இந்நிலையில் உக்ரைன் மீதான போரில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன்தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ரஷியா தெரிவித்தது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ரஷ்யாவின் திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் ரஷ்யா மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதை பார்த்தாலே போதும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கு பதலளிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைதியான ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இன்னும் வேறு என்னெல்லாம் தயார் செய்துள்ளீர்கள்? ரசாயன ஆயுதங்களால் எங்கு தாக்குகிறார்கள்? என்று கூறுங்கள் என்று கேள்விகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுப்பியுள்ளார்.

மேலும் நான் ஒரு நாட்டின் தலைவர் என்றும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்றும் கூறிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தங்கள் நிலத்தில் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கபடவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் அமெரிக்கா இரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும் இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்ட வேண்டும் என்று ரஷ்யா முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர்  புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் 16 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் உக்ரைன் ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் உக்ரைனின் பல்வேறு இடங்களில் இன்று ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில் புதினின் இந்த திடீர் அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios