பரபரப்பு.. ! ரஷ்யா போட்ட தடை.. ஷாக்கில் பிரிட்டன்.. மூன்றாம் உலகப்போர் தொடங்கியதாக அறிவிப்பு..
அண்மையில் உக்ரைன் சென்று அதிபர் ஜெல்ன்ஸ்கியுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ரஷ்யா- புதிய தடை:
அண்மையில் உக்ரைன் சென்று அதிபர் ஜெல்ன்ஸ்கியுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. துறைமுக நகரமாக மரியுபோல் தொடர் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு ரஷ்ய படை வசம் சென்றுள்ளது. அங்கு 500 க்கும் மேற்பட்டவர்களை பிணை கைதிகளாக ரஷ்யா படையினர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் நாட்டை விட்டு சுமார் 46 லட்சம் பேர் வெளியேறி மற்ற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ், புச்சா, சுமி, மரியுபோல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வான்வழித்தாக்குதல் நடத்தபட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டி வருகிறார். அதற்கு சாட்சியா, கீவ்விலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள புச்சா நகரில் ரஷ்யா படை தாக்குதல் நடத்தி சென்ற பிறகு, தெருங்களில் கொத்து கொத்தாக கிடந்த சடலங்களின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைன் - ரஷ்யா போரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
தீவிரமடையும் தாக்குதல்:
இந்நிலையில் கருங்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் மிகப்பெரிய போர் கப்பல் மோஸ்க்வா, உக்ரைன் தாக்குதலில் சேதமடைந்து தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியது. ஆனால் கடுமையான சூறாவளி காற்றினால் சேதமடைந்து தீப்பிடித்து எரிந்து கடலில் முழ்கியதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் தான் ரஷ்ய போர்கப்பல் சேதமடைந்து தீப்பிடித்து எரிந்தது என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை கூறுகிறது.
மேலும் ரஷ்யாவின் போர்கப்பல் மூழ்கியதை அடுத்து, உக்ரைனின் கீவ் சுற்றியுள்ள நகரங்களில் ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தியது. இதில் 900க்கும் மேற்பட்ட மக்கள் உயிர்ழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது பிரிட்டன் பொருளாதார தடை விதித்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் உக்ரைன் தலைவர் கீவ் சென்ற பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
மூன்றாம் உலகப் போர்:
உக்ரைனின் நடந்து வரும் போரில் நிலவரங்கள் குறித்தும் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தும் வந்தார்.உக்ரைன் அதிபர் ஜெல்ன்ஸ்கி சரியான வழியில் செல்லுவதாகவும் உக்ரைன் மக்கள் சிங்கம் போன்றவர்கள் என்றும் பாராட்டி பேசினார். ரஷ்யாவிற்கு எதிராக போரிடும் வகையில், உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன் வழங்கி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரஷ்யாவிற்குள் நுழைய அந்த நாடு தடை விதித்துள்ளது. மேலும் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், 'மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது' என, ரஷ்ய அரசு 'டிவி'யில் அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: உக்ரைன் தாக்குதல்..? கருங்கடலில் முழ்கிய ரஷ்யாவின் மிக பெரிய போர் கப்பல்.. அதிர்ச்சியில் புதின்..