Russia Ukraine Crisis : எங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் நாசம் தான்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா.!

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுக்க தயாராகி வருகிறது. இதற்காக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 பிராந்தியங்ளை தனி சுதந்திர நாடாக அறிவித்து, அங்கு ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது.ரஷ்ய அதிபர் புடினின் தன்னிச்சையான இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

Russia Ukraine Crisis... Russia indirectly warns the United States

உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் போர் தொடுக்க உத்தரவிட்டதற்கு  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் என புதின் எச்சரித்துள்ளார். 

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுக்க தயாராகி வருகிறது. இதற்காக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 பிராந்தியங்ளை தனி சுதந்திர நாடாக அறிவித்து, அங்கு ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது.ரஷ்ய அதிபர் புடினின் தன்னிச்சையான இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

Russia Ukraine Crisis... Russia indirectly warns the United States

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன. தனது நாட்டில் உள்ள 2 ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கு சற்றும் சளைக்காத அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, முக்கிய நகரங்களான  கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்த ராக்கெட் குண்டால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Russia Ukraine Crisis... Russia indirectly warns the United States

இந்நிலையில், உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்புக்கு ராஷ்யாவே காரணம். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios