Asianet News TamilAsianet News Tamil

சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை வெற்றி.. அமெரிக்காவை அலற விடும் ரஷ்யா..!

இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடும் பட்சத்தில், அவர்கள் அதுவரை சந்தித்திராத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்," என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

Russia Test-Fires Nuclear-Capable intercontinental ballistic missile In Warning To US Allies
Author
India, First Published Apr 21, 2022, 11:44 AM IST

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து இருக்கிறோம். இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும். எங்களை எதிர்ப்பவர்கள், இதை பற்றி நினைவில் கொள்ளுங்கள் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்து இருக்கிறார்.

ஏவுகணை சோதனை:

உக்ரைன் மீது சிறப்பு ராணுவ ஆப்பரேஷன் எனும் பெயரில் தீவிர போரை ரஷ்யா கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறது. எனினும், இதுவரை உக்ரைனின் முக்கிய நகரம் எதையும் ரஷ்யா இதுவரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முடியவில்லை. இருந்த போதிலும் போர் திட்டமிட்டப்படி சென்று கொண்டிருப்பதாக ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தான் ரஷ்யா தனது புதிய ஏவுகணையை சோதனை செய்து இருக்கிறது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். மேலும் இதன் ஏவுகணை ஒன்றில் அதிகபட்சம் பத்து வார் ஹெட்களை வைக்க முடியும். 

 

அதிபர் எச்சரிக்கை:

இது குறித்து அதிபர் விளாடிமிர் புதின் கூறும் போது, "இது தனித்துவம் மிக்க ஆயுதம் என்றும் இது ரஷ்ய ஆயுத படைகளின் போர் திறனை மேலும் வலுப்படுத்தும் என குறிப்பிட்டு இருக்கிறார். ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை உள்ளிட்டவைகளை புதிய ஏவுகணை மீண்டும் உறுதி செய்து இருக்கிறது. இனி ரஷ்யாவை தாக்க நினைக்கும் எதிரிகள் இது குறித்து நினைத்து பார்க்க வேண்டும்," என தெரிவித்தார்.

புதிய சார்மாட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வடக்கு அர்காங்லெக் பகுதியின் லெஸ்டிக் காஸ்மோடிரோமில் இருந்து ஏவப்பட்டதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக 2018 வாக்கில் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தனது புதிய தலைமுறை ஏவுகணை அடங்கிய வீடியோக்களை வெளியிட்டு இருந்தது. இந்த பரிசோதனைக்கு முன் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்று அமெரிக்க பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

உக்ரைனிற்குள் ரஷ்யா படைகள் செல்ல துவங்கியதும், நாட்டின் அணு ஆயுத படைகளை உச்சக்கட்ட தயார் நிலையில் இருக்க அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். மேலும் "இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடும் பட்சத்தில், அவர்கள் அதுவரை சந்தித்திராத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்," என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios