கொரோனாவுக்கு மருந்து ரெடி... அங்கீகாரம் கொடுத்த ரஷ்ய அரசு... முதற்கட்டமாக 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை...!
முதற்கட்டமாக மாதந்தோறும் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துகள் உற்பத்தி செய்யப்படும் என்றும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளை சின்னாபின்னமாக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை கடந்துள்ளது. இந்த கொடூர வைரஸால் இதுவரை 4 லட்சத்து 24 ஆயிரத்து 716 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இந்த நெருக்கடி நேரத்திலும் ஆறுதல் தரும் விதமாக 38 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கோர வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பியுள்ளனர்.
கொரோனாவிற்கு இதுவரை தடுப்பு மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிர் இழப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உயிர்கொல்லி வைரஸின் தாக்கத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 11 ஆயிரத்து 423 ஆகும். இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸிற்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளிலும் மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா முதன் முறையாக மருந்து கண்டுபிடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அவிஃபாவிர் (Avifavir) என்ற மருத்தை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் 50 சதவீத முதலீடுகளை கொண்ட கெம்ரார் என்ற உள்நாட்டு நிறுவனம் இந்த மருத்தை தயாரிக்க உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை ரஷ்ய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: நயன்தாராவின் பளபளக்கும் அழகிற்கான ரகசியம்... 35 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்க காரணம் இதுதான்...!
முதற்கட்டமாக மாதந்தோறும் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துகள் உற்பத்தி செய்யப்படும் என்றும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.