தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழர்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியைகாண ஆண்டுதோறும் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வருவது வழக்கம். 

இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டி,  முன்பைவிட அதிக சிறப்புடனும், அதிக ஆர்வத்துடனும் தமிழக அரசாலும்,  ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகளாலும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் ஜல்லிக்கட்டு  போட்டிக்கு உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு , பாலமேடு ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றவையாகும்.  இந்நிலையில் போட்டியை காண இந்திய பிரதமர் மோடி, மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர்  புடின் ஆகியோர் வரும் ஜனவரி மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதன்மூலம் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் பிரபலமடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை உலகத்தின் கவனத்தை ஈர்த்ததுடன் மாமல்லபுரத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளது.  இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வரஉள்ளது  பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.