அமெரிக்காவை நடுநடுங்க வைக்கும் ரஷ்ய ஆயுதங்கள்...!! சண்டைக்கு வந்தால் சம்பலாக்க முடிவு செய்த புடின்...!!
அமெரிக்கா தயாரித்துள்ள ஏவுகணைகளால் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதையெல்லாம் எதிர்கொள்ளும் வகையில் அவற்றையெல்லாம்விட பன்மடங்கு வல்லமை கொண்ட, தனிச்சிறப்பான ஆயுதங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் .
உலகம் இதுவரை கண்டிராத நவீன ஆயுதங்களை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அமெரிக்கா சீனா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . ரஷ்யாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராகவும் பிரதமராக மாறி மாறி பதவி வகித்து வருகிறார் புடின். அதேபோல அமெரிக்காவுக்கு இணையான ராணுவம் , அறிவியல் வளர்ச்சி என அசைக்க முடியாது தனி ராஜ்ஜியமாக திகழ்கிறது ரஷ்யா.
இந்நிலையில் 20 ஆண்டு காலமாக தொடர் அரசியலில் இருந்து வருவதை முன்னிட்டு அவர் மூன்று மணி நேரம் மாரத்தான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் . அவரின் பேட்டிகள் 20 பகுதிகளாக வெளியிடப்பட்டு வருகிறது . இதில் கடந்த 20 ஆண்டுகளில் அவர் சந்தித்த போராட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அமைச்சரவை மாற்றம் , உக்ரைன் விவகாரம் , மாஸ்கோ போராட்டம் , நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆயுதம் தயாரிப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் கருத்து பகிர்ந்துள்ளார் . அதில் ராணுவம் பாதுகாப்பு மற்றும் ஆயுத உற்பத்தி குறித்து தெரிவித்துள்ளார் , அதில், உலகம் இதுவரை பார்த்திராத ஆயுதங்களை ரஷ்யா உருவாக்கியுள்ளது . புதிய ஹைபர்சோனிக் வகை ஆயுதங்கள் அதாவது ஒலியைவிட 27 மடங்கு வேகத்தில் சென்று தாக்கக் கூடியவை இந்த வகை ஆயுதங்கள் எனவும் அவைகள் கடந்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
நவீன ஆயுதங்களின் பங்கு ரஷ்ய ராணுவத்தில் 6 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரித்துள்ளது . அதாவது அமெரிக்கா தயாரித்துள்ள ஏவுகணைகளால் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதையெல்லாம் எதிர்கொள்ளும் வகையில் அவற்றையெல்லாம்விட பன்மடங்கு வல்லமை கொண்ட, தனிச்சிறப்பான ஆயுதங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் . இது எங்களுக்கு மட்டும் அவசியமானது அல்ல , உலக பாதுகாப்புக்கும் அவசியமானது . நாங்கள் யாருடனும் சண்டைக்குப் போவதில்லை எங்களுக்கு எதிராக யாரும் சண்டையிட விரும்பக் கூடாது என்பதற்காக இந்த ஆயுதங்களை உருவாக்கி உள்ளோம் என புடின் அதிரடியாக தெரிவித்துள்ளார்.