சீனாவின் தூக்கத்தை கலைத்த ரோஹ்தாங் அடல் சுரங்கப் பாதை..!! அக்டோபர் 3-ஆம் தேதி திறந்து வைக்கிறார் மோடி.

லே-மணலியை இணைக்கும் வகையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி  வாஜ்பாயின் நினைவாக சுமார் 9 கிலோமீட்டர்  நீளமுள்ள சுரங்கப்பாதை இந்தியா அமைத்துள்ளது.

Rohtang Atal tunnel disturbs China.  Modi opens on October 3.

லே மற்றும்  மணாலியை  இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ரோஹ்தாங் அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 3-ஆம் தேதி திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா எல்லையில் தொடர்ந்து  இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வரும் நிலையில் அதன் சூழ்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா எல்லையோர சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் நிலத்துக்கு அடியிலும் தனது சாலை போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் லே-மணாலியை இணைக்கும் வகையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி  வாஜ்பாயின் நினைவாக சுமார் 9 கிலோமீட்டர்  நீளமுள்ள சுரங்கப்பாதை இந்தியா அமைத்துள்ளது. 

Rohtang Atal tunnel disturbs China.  Modi opens on October 3.

இந்த சுரங்கப்பாதை அனைத்து பருவங்களிலும் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் பனிப்பொழிவு அல்லது கடுமையான மழையாக இருந்தாலும் ராணுவ உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கான ரேஷன் பொருட்களை இந்த டன்னல் வழியாக கொண்டு செல்ல முடியும்.  இந்தியாவின் இந்த பொறியியல் திட்டம் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சுரங்கப்பாதை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிக அதிக உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை இதுவாகும். 

Rohtang Atal tunnel disturbs China.  Modi opens on October 3.

இந்த சுரங்கப் பாதை மூலம் லே மற்றும் மணாலிக்கு இடையிலான தூரம் வெறும் 46 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதை மூலம்  இந்திய ராணுவம் மிக விரைவாக செயல்பட முடியும். இந்த சுரங்க பாதை மூலம் லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புகளுடன் விரைவான தொடர்பை ஏற்படுத்த முடியும். அவசர கால சூழ்நிலைகளுக்காக இந்த சுரங்கப் பாதையின் கீழ் இரண்டாவது சுரங்க பாதையும் கட்டப்பட்டு வருகிறது. அதாவது எந்த ஒரு அசம்பாவித சூழ்நிலையையும்  சமாளிக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலா வெளியேற்றம் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை பிர் பஞ்சலின் மலைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை 13,050 அடி உயரத்தில் அமைந்துள்ள ரோஹ் தாங்  பாசுக்கு மாற்றுப்பாதையாகவும் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை கட்டுமானத்தின் தொடக்கத்தில் 8.8 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக உருகாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஜிபிஎஸ் அளவீட்டில் அந்த சுரங்கப்பாதை 9 கிலோமீட்டர் நீளமாக அமைந்துள்ளது.

Rohtang Atal tunnel disturbs China.  Modi opens on October 3.

சுமார் 4 ஆயிரம் கோடி செலவில் குதிரையினுடைய கால் குளம்பு வடிவத்தில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சுரங்கப் பாதையின் மூலம் மணாலிக்கும்-லேவுக்கும் இடையேயான தூரம் 46 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல நூறு மைல்களைக் கடந்து சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக பயணிக்க வேண்டி இருந்த இலக்கை தற்போது இந்த சுரங்கப் பாதையின் வழியாக பத்து நிமிடங்களில் சென்றடையும் முடியும். மணாலி பள்ளத்தாக்கிலிருந்து லஹால் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கான பயணம் வழக்கமாக 5 மணி நேரத்திற்கும் மேலாக அமைந்தது. தற்போது அதை பத்து நிமிடங்களுக்குள் கடக்க முடியும்.  என்ற நிலை உருவாகி உள்ளது. அதேபோல சுரங்கப்பாதையில் ஒவ்வொரு 150 மீட்டருக்கும் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு 60 மீட்டருக்கும் இடையில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் அவசர வெளியேற்றம் இடம் இடம்பெற்றுள்ளது.  ஒவ்வொரு 2.2 கிலோ மீட்டர் தூரத்திலும் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பு அதாவது காற்றின் தர சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் வாகனங்கள் ரோஹ்தாங் சுரங்கப்பாதை வழியாக செல்ல முடியும். 

Rohtang Atal tunnel disturbs China.  Modi opens on October 3.

அதிகபட்சமாக வாகனங்கள் இந்த சுரங்கத்தில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும், பனிப் பொழிவின்போது அதாவது நவம்பர் முதல் ஏப்ரல் வரை சுமார் ஆறு மாதங்களுக்கு எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது இந்த சுரங்கப் பாதையின் மூலம் 364 நாட்களும் எல்லையை கண்காணிக்க முடியும். இந்த சுரங்க பாதையின் கட்டுமானம் ஜூன் 28- 2010 அன்று தொடங்கப்பட்டது. இதை 2019க்குள் முடிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா தொற்று காரணமாக இதை கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனல் தற்போது கட்டுமானப்பணி முழுமையான நிறைவு பெற்றுள்ளது. இந்த சுரங்க பாதையை கட்ட சுமார் 3 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 650 சூப்பர்வைசர்கள் என 24 மணி நேரம் ஷிப்டு முறையில் பணி நடைபெற்று வந்தது,  இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதன் மூலம் இங்கிருந்து 8 லட்சம் கனமீட்டர் கல் மற்றும் மண் பிரித்தெடுக்ப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் வகையில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்த சுரங்கப் பாதையைக் கட்ட 2002 ஆம் ஆண்டில் அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுரங்கப் பாதையின் மூலம் சீனா பாகிஸ்தான் கதிகலங்கி போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios