இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 259 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக குற்றவாளிகளை கண்டறியும்பொருட்டு, தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர், கைது செய்யப்பட்டுள்ள 76 பேரின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்கள், உறவினரது வீடுகள் உள்ப்ட நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க தவறியதற்காக பொறுப்பேற்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். 
நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேவாலயங்களை மறுசீரமைப்பு செய்ய உறுதி ஏற்கிறேன் என்றும், சர்வதேச நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரமதர் ரணில் விக்ரமசிங்கே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் சிறீசேனா, பாதுகாப்பு குறைபாட்டால் ஏற்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல் மன்னிப்பு கோரியிருந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கரசிங்கேவும் மன்னிப்பு கோரியுள்ளார்.