போரிஸ் ஜான்சனுடன் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சந்திப்பு... பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை!!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்தியாவின் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்தியாவின் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், புதிய இந்தியாவின் ஸ்டார்ட்அப் நட்சத்திரங்களுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அமைச்சர் பால் ஸ்கேலி ஆகியோரை சந்தித்தேன். பின்னர் அவர்களுடன் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவித்துள்ள பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா குறித்து சிறப்பாக கலந்துரையாடினேன். அதை தொடர்ந்து இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி விவாதித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விளாடிமிர் புடினிடம் பேசிய மோடி.. ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைபாட்டை வலியுறுத்தினார்.
முன்னதாக UK-India Week 2022 இன் மூன்றாம் நாள், பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) ஏற்பாடு செய்தது, The Forum: Reimagine@75 - Reimagine இன் மையக் கருப்பொருளைச் சுற்றி இரண்டு நாள் ஆற்றல் நிரம்பிய தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்டார்ட் அப், சுற்றுச்சூழல், புவிசார் அரசியல், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் முதலீடுகள் முதல் சமூகத் தாக்கம் வரை பிரிட்டன் - இந்தியா உறவுகளின் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையையும் உள்ளடக்கும் வகையில் இந்த உரையாடல் தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகின் விலை உயர்ந்த கார் பதிவு எண் 132 கோடியா ? அடேங்கப்பா.!
பிரிட்டன் - இந்தியா வாரத்துடன் ஒத்துப்போகும் வகையில், பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் HSBC இந்தியா, பியர்சன் இந்தியா உள்ளிட்ட முன்னணி இந்திய மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, செப்டம்பர் முதல் இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்தில் படிப்பதற்காக முழு நிதியுதவியுடன் கூடிய உதவித்தொகைகளை பிரிட்டன் அரசாங்கம் அறிவித்தது. இந்த நிலையில் தான் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்தியாவின் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார். அப்போது, கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவித்துள்ள பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா குறித்து விவாதித்ததாகவும் இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி விவாதித்ததாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.