வைகோ, ராமதாஸ், சீமான் போன்றவர்கள் இலங்கையில் அரசியல் செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் பற்றி பேசுகிறார்கள், அவர்கள் தேவையில்லாமல் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம் என்று முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் எம்பி நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்ச வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக மக்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று வைகோ, அன்புமணி, மு.க ஸ்டாலின், சீமான், ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். 

இது தொடர்பாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் எம்பி நமல் ராஜபக்சே விடுத்துள்ள அறிக்கையில், ‘’தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் பற்றி பேசுகிறார்கள். சந்தர்ப்ப ரீதியாக அவர்கள் ஈழத்தமிழர் அரசியலை கையில் எடுத்து இருக்கிறார்கள். தங்களுக்கு தேர்தலில் வாக்கு கிடைக்க வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள்.  இன்னும் சிலர் மிகவும் சுயநலமாக அரசியல் செய்கிறார்கள்.

சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். இவர்கள் அரசியலை தவிர தங்கள் மக்களுக்கு வேறு எதுவும் செய்தது கிடையாது.  ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் கெடுதல்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என்று இவர்கள் நல்ல விஷயம் எதுவும் செய்தது கிடையாது. புதிய ஜனாதிபதியை விமர்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக அவர்கள் சிந்திக்க வேண்டும். எதிர்காலம் சிறப்பு தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையில் செயல்படுங்கள். தேவையில்லாமல் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம். தமிழர்கள் இலங்கையின் தேசியத்தை உளமாற நேசிக்கும் வகையில் செயல்பட வேண்டும்’’என்று அவர் தெரிவித்துள்ளார்.