எதிரிகளை துவம்சம் செய்ய வருகிறது அதிநவீன போர் விமானங்கள்..!! உச்ச கட்ட கலக்கத்தில் சீனா- பாகிஸ்தான்..!!!
சமீபத்தில் இந்திய சீன எல்லையில் சீன ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இரண்டு ராணுவ தரப்புக்கும் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளது .
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இந்தியா பதற்றமான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில் , வரும் ஜூலை மாத இறுதிக்குள் பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் என விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது . ஆனால் ரபேல் போர் விமானம் வருவதற்கான தேதி இன்னும் இறுதியாகவில்லை என தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்தது . அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியதுடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சித்த இருநாடுகளும் அதில் தோல்வியை தழுவின . அதனையடுத்து பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது , சமீபத்தில் இந்திய சீன எல்லையில் சீன ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இரண்டு ராணுவ தரப்புக்கும் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளது .
சீனா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் கூட்டணி அமைத்து இந்தியாவை எதிர்த்து வரும் நிலையில் , ஒருவேளை போர் மூளும் சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும், அதற்கு ஏற்ப நமது ராணுவத்தை பலப்படுத்த வேண்டும் என முன் கூட்டியே முடிவு செய்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது அதன் ஒரு முயற்சியாக பல ஆயிரம் கோடிகளை நிதி ஒதுக்கியுள்ள நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன் 60,000 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா ஒப்பந்தம் செய்தது இதன் மூலம் மொத்தம் 36 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் செய்வது என முடிவு செய்யப்பட்டது . முதற் கட்டமாக தயாராகியுள்ள நான்கு ரஃபேல் போர் விமானங்கள் மே -மாதம் இறுதிக்குள் வந்த சேரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் , குரோன வைரஸ் எதிரொலியாக அது கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது .
இந்நிலையில் பிரான்சில் வைரஸ் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது நிலையில் வரும் ஜூன் மாத இறுதிக்குள் நான்கு ரஃபேல் போர் விமானங்களும் இந்தியா வந்து சேரும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது . அந்த நான்கு விமானங்களும் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படையை வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது , வரவுள்ள 4 விமானங்களில் முதல் மூன்று விமானங்கள் இரண்டு பேர் அமரும் இருக்கை கொண்ட வசதி கொண்ட விமானங்கள் எனவும், அதில் ஒரு விமானம் ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்கு ஊன்றுகோலாக இருந்த விமானப் படைத் தலைவர் பதாரியா அவர்களின் நினைவாக அவரின் பெயரில் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுமட்டுமின்றி முன்கூட்டியே இந்த விமானங்களை ஒட்டி பழக இந்திய விமானப்படை வீரர்கள் பிரான்ஸ் சென்று பயிற்சி பெற்றுள்ளனர். ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் மற்றொரு குழு பயிற்சிக்காக பிரான்ஸ் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இருந்து புறப்படும் இந்த விமானம் இந்தியா வந்து சேர 10 மணி நேரம் ஆகும் என்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் தரையிறக்கப்பட்டு பின்னர் அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது . ரஃபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்வதன் மூலம் சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைவிட இந்திய விமானப்படையின் பலம் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் இரு நாடுகளையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் ஆற்றல் பெற முடியும் என்றும் இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .