queen elizabeth: பிரிட்டன் ராணி எலிசபெத் கவலைக்கிடம்? பல்வேறு நாட்டுத் தலைவர்கள் நலம் பெற வாழ்த்து!!
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக பக்கிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. இவருக்கு வயது 96.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. நேற்று, புதன் கிழமை மூத்த அரசியல்வாதிகளுடன் ராணிக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால், கூட்டத்தை ரத்து செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி இருந்தனர். இதையடுத்து, அவரது கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கு முந்தையநாள் பிரிட்டன் பிரதமராக இருந்து ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனுக்கு நடந்த பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கும் லிஸ் டிரஸ்சையும் சந்தித்து இருந்தார்.
இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து, ஸ்காட்லாந்தில் இருக்கும் பல்மோரல் அரண்மனைக்கு இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியம் இருவரும் விரைந்து கொண்டு இருக்கின்றனர்.
இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?
பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், ''இன்று காலை ராணியின் உடல்நிலையை பரிசோதித்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து அச்சம் அடைந்துள்ளனர். மேலும், அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். பல்மோரளில் இருக்கும் கென்சிங்டன் அரண்மனையில் ராணி எலிசபெத் தற்போது தங்கியுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத் இதற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது, இதுபோன்று அரண்மனை அறிக்கை வெளியிட்டது இல்லை. இன்றைய அரண்மனை அறிக்கை பிரதமர் லிஸ் டிரஸ் மற்றும் நாடாளுமன்றத்தின் மூத்த அரசியல்வாதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், ''பக்கிங்காம் அரண்மனையில் இருந்து இன்று மதியம் வெளியான ராணியின் உடல்நலம் குறித்த தகவலால் நாடே கவலையில் இருக்கும். நான் மற்றும் நாட்டு மக்களும் ராணிக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆறுதலாக இருப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆணுறுப்பின் சைஸை அளக்க USB கேபிளை உள்ளே சொருகிய சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரிட்டன் ராணி எலிசபெத் நலம் பெற வேண்டும் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எனது சார்பிலும் எனது நாட்டு மக்கள் சார்பிலும் விரைவில் வர் நலம் பெற்று வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.