Afghanistan one of his colleagues in the country police fired indiscriminately killing 11 police and then fled in the area of the incident caused a stir.

ஆப்கானிஸ்தான் நாட்டில் போலீஸ் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் 11 போலீசாரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் போலீசகாரர் ஒருவர் நேற்றிரவு பணியில் இருந்துள்ளார். அப்போது திடீரென தனது துப்பாகியை எடுத்து தன்னுடன் பணியாற்றும் போலீச்காரர்களை கண்மூடித்தனமாக சுட்டார்.

இதில், பணியில் இருந்த 11 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், பலியான போலீசார்களிடம் இருக்கும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தயாராக இருந்த வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ்காரர் ஒருவரே தன்னுடன் பணியாற்றும் 11 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.