மாஸ்க் அணியாமல் சுற்றினால் ரூ.41.70 லட்சம் அபராதம்... நாளை முதல் கத்தாரில் அமலாகிறது அதிரடி சட்டம்...!
மேலும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது மட்டுமே தற்போதைக்கு நம்மிடம் இருக்கும் தடுப்பு நடவடிக்கையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸின் கோர தாண்டவம் தற்போது 200க்கு மேற்பட்ட நாடுகளை ஆட்டி படைக்கிறது. உலகம் முழுவதும் 46 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 17 லட்சத்து 70 ஆயிரத்து 993 பேர் அந்த வைரஸிடம் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து காப்பதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் காட்டுத்தீ போல் பரவும் தொற்றை தடுக்க சமூக விலகலை கடைபிடிப்பது ஒன்றே சரியான வழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளைகுடா நாடான கத்தாரில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,547 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது. பாரபட்சமின்றி கோரமுகம் காட்டும் இந்த வைரஸால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கத்தார் உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது கஷ்டம் என்றும், நமது சமூகத்தில் கொரோனா மற்றொரு வைரஸாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது. எப்படி எச்.ஐ.வி. வைரஸ் உடன் வாழ பழகிக் கொண்டோமோ, அதை போல் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று கூறியது. மேலும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது மட்டுமே தற்போதைக்கு நம்மிடம் இருக்கும் தடுப்பு நடவடிக்கையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!
அதனால் பல நாடுகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே வழியில் கத்தாரும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. மாஸ்க் அணியாமல் பொது இடத்தில் சுற்றித் திரிந்தால் 2 லட்சம் ரியால்கள் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.41 லட்சத்து 67 ஆயிரத்து 920 ரூபாய்) வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது இரண்டு சேர்த்தோ விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் தனியாக செல்வோருக்கு மட்டும் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.