நாங்க நினைச்சது நடக்கும் வரை உக்ரைனுக்கு அமைதி கிடையாது! ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்
உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய அதிபர் புதின் நேரடியாக மக்களுடன் உரையாடுவது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு இதே போல நடைபெற இருந்த செய்தியாளர் சந்திப்பை புதின் ரத்து செய்திருந்தார்.
ரஷ்யாவில் இலக்குகள் அனைத்தும் நிறைவேறும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது இதனைக் கூறியுள்ளார்.
பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் புதின் தனது இலக்குகளை அடையும் வரை உக்ரைனில் அமைதி இருக்காது என்றும் தனது நோக்கங்களில் இருந்து மாறாமல் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய அதிபர் புதின் நேரடியாக மக்களுடன் உரையாடுவது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு இதே போல நடைபெற இருந்த செய்தியாளர் சந்திப்பை புதின் ரத்து செய்திருந்தார்.
விளாடிமிர் புதினுடன் நேரடியாக உரையாடும் இந்த இந்த நிகழ்வு ரஷ்ய அரசால் மிக கவனமாக ஒழுங்கமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"நம் இலக்குகளை அடைந்த பின்புதான் அமைதி திரும்பும். நமது இலக்குகள் மாறவில்லை. அப்போது பேசியதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். உக்ரைனை ராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்று ரஷ்ய ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
"அதற்காக ராணுவ நடவடிக்கை உட்பட பிற நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வோம். இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் அவற்றை ஒப்புக்கொண்டோம். ஆனால் பின்னர் அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன" என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனில் தற்போது சுமார் 617,000 ரஷ்ய வீரர்கள் இருக்கின்றனர். இதில் சுமார் 244,000 பேர் தொழில்முறை ரஷ்ய ராணுவப் படைகளுடன் இணைந்து போரிட அழைக்கப்பட்டவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, புதினுடன் உரையாடும் நிகழ்ச்சியில் அவரிடம் கேட்பதற்காக 10.5 லட்சத்துக்கும் அதிகமான கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.