ஜூடோ சம்மேளன பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் புடின் இடைநீக்கம்... ஜூடோ சம்மேளனம் அதிரடி!!
சர்வதேச ஜூடோ சம்மேளனம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கொடுத்திருந்த கௌரவத் தலைவர் பதவி மற்றும் ஜூடோ சம்மேளனத்தின் தூதர் ஆகிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை ரத்து செய்துள்ளது.
சர்வதேச ஜூடோ சம்மேளனம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கொடுத்திருந்த கௌரவத் தலைவர் பதவி மற்றும் ஜூடோ சம்மேளனத்தின் தூதர் ஆகிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை ரத்து செய்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியது முதல் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அதற்குப் பதிலடியாக சம்பந்தப்பட்ட நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதினும் பல்வேறு தடைகளை அறிவித்து வருவதுடன் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைனை நான்கு திசைகளில் இருந்தும் தாக்கும் ரஷ்ய ராணுவம், தற்போது ஏவுகணைகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. எண்ணெய் கிடங்குகள், எரிவாயுக் குழாய்களை தகர்க்கும் ஏவுகணைகள், குடியிருப்புப் பகுதிகளையும் பதம் பார்த்து வருகின்றன.
இது மிருகத்தனமான செயல் என்று குற்றம் சாட்டியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது ரஷ்யா உக்ரைனில் நடத்தும் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவில், ரஷ்ய ராணுவ வீரர்கள் கொள்ளையடிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். ரஷ்ய அத்துமீறல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு உள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனிடையே, சர்வதேச ஜூடோ சம்மேளனம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கொடுத்திருந்த கௌரவத் தலைவர் பதவி மற்றும் ஜூடோ சம்மேளனத்தின் தூதர் ஆகிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை ரத்து செய்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் தாக்குதல் நடத்தி அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு கண்டங்கள் வலுத்து வரும் நிலையில், சர்வதேச ஜூடோ சம்மேளனம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கொடுத்திருந்த கௌரவத் தலைவர் பதவி மற்றும் ஜூடோ சம்மேளனத்தின் தூதர் ஆகிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை ரத்து செய்துள்ளது.