இந்தியாவை சொந்த மண்ணில் தாக்கியுள்ளோம்.. இது இம்ரான் கான் அரசின் மிகப்பெரிய சாதனை.. பாக்., அமைச்சர் ஆணவ பேச்சு
புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை என என பாகிஸ்தான் அமைச்சரே ஒருவரே ஒப்புதல் அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை என என பாகிஸ்தான் அமைச்சரே ஒருவரே ஒப்புதல் அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பிப்ரவரி 27-ம் தேதி, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோர கிராமத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. அபிநந்தனை விடுவிக்குமாறு பல்வேறு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தநிலையில், மார்ச் 1-ம் தேதி விடுவிக்கப்பட்ட அபிநந்தன், அட்டாரி - வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பினார்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர்;- நாம் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் தாக்கியுள்ளோம். புல்வாமாவில் நமது வெற்றி என்பது பிரதமர் இம்ரான்கானின் தலைமையிலான பாகிஸ்தான் அரசின் மக்களின் வெற்றியாகும். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரே இந்தியாவின் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்குத் தாங்கள்தான் காரணம் என ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தான் அப்படி சொல்லவில்லை என பல்டி அடித்துள்ளார். எங்கள் போர் விமானங்கள் இந்திய எல்லையை நோக்கி சிறிப் பாய்ந்தன. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளைத்தான் நான் பாராட்டி பேசினேன். புல்வாமா தாக்குதலை பாராட்டவில்லை. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்காது என்றார்.