மீண்டும் நிறவெறியின் உச்சத்தில் அதிபர் ட்ரம்ப்..!! கமலா ஹாரிஸின் குடியுரிமை குறித்து சர்ச்சை பேச்சு..!!
பிரச்சினை கிளப்பப்பட்டது, ஆனால் அப்போது அது எடுபடவில்லை. அதிபர் ஒபாமாவுக்கு பிரச்சினை கிளப்பிய அதே பிரதர் இயக்கம் தற்போது துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸின் குடியுரிமை குறித்து பிரச்சினை கிளப்பியுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி அதிபர் ட்ரம்ப் பிரச்சனை கிளப்பி இருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார். அதிபர் தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் நடைபெற உள்ளதால், ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவர் தற்போது அமெரிக்க செனட் சபை உறுப்பினராக உள்ளார். 55 வயதாகும் கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜமைக்காவை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார்.
அவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். டொனால்ட் ஹாரிஸ்- சியாமளா கோபாலன் தம்பதியருக்கு கலிபோர்னியாவில் 1564 ஆம் ஆண்டு பிறந்தார் கமலா ஹாரிஸ். தற்போது பிரச்சனை என்னவென்றால், அதாவது அமெரிக்காவில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், அவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும். இந்நிலையில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால் அவர் கருப்பின துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார் என பேசப்பட்டு வருகிறது. முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவை பூர்வீகமாக கொண்டவர் அவர். அவர் அதிபராக போட்டியிட்டபோது அவரது குடியுரிமை பற்றி அமெரிக்காவில் இனவெறிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிர்தர் என இயக்கம் ஒபாமாவின் குடியுரிமைப்பற்றி கேள்வி எழுப்பியது.
பிரச்சினை கிளப்பப்பட்டது, ஆனால் அப்போது அது எடுபடவில்லை. அதிபர் ஒபாமாவுக்கு பிரச்சினை கிளப்பிய அதே பிரதர் இயக்கம் தற்போது துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸின் குடியுரிமை குறித்து பிரச்சினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்திக்கையில், கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியாகவோ, துணை ஜனாதிபதியாகவோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி இல்லாமல் போகலாம் என கூறியுள்ளார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்தவராக இருந்தாலும், அவருக்கு தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என ட்ரம்ப் கூறியுள்ளார். அவரை வேட்பாளராக தேர்வு செய்வதற்கு முன்பு ஜனநாயகக் கட்சியினர், அவரது குடியுரிமை விவகாரத்தை நன்கு ஆராய்ந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது கமலா ஹாரிஸ் குடியுரிமை பற்றி ட்ரம்ப் கேள்வி எழுப்பி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலஹாசன் அமெரிக்காவில் பிறந்தவர் என்பதால் அவர் அமெரிக்காவின் இயற்கையான குடிமகனாக கருதப்படுவார் என்றும், அரசியல் சட்டம் 2வது பிரிவு கூறுகிறது, எனவே அவர் போட்டியிடுவதை எந்த சக்தியாளும் தடுக்க முடியாது என பிடன் கூறியுள்ளார்.