போப் பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகன் சிட்டியில்  பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து இழுத்தார். 

இதனால் கோபமடைந்த போப், அந்த பெண்ணின் கையை இரு தடவை தட்டினார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, போப் பிரான்சிஸ் .சில நேரங்களில் தானும் பொறுமை இழந்து விடுவதாக தனது செயலுக்காக பின்னர் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் வாடிகன் நகரில், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் பிரான்சிஸ் வாராந்திர பார்வையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 


அப்போது பார்வையாளர் வரிசையில் நின்றிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் போப்பிடம் எனக்கு முத்தம் தருவீர்களா ?  என கேட்டார்.

 

உடனே ,நான் முத்தம் தருகிறேன். நீ அமைதியாக இருக்க வேண்டும். கடிக்க கூடாது என கிண்டலாக கூறி கன்னியாஸ்திரி வலது கன்னத்தில் முத்தமிட்டார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.