நியூயார்க் சுரங்கப் பாதையில் குண்டு வெடிப்பு... பலர் காயம்... ஒருவர் கைது!
நியூயார்க்கில் சுரங்க பாதையில் பயங்கர சத்தத்துடன் பைப் குண்டு வெடித்ததில் பலர் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் டைம்ஸ் சதுக்கத்தின் அருகே உள்ள சுரங்க பாதையில் போர்ட் அதாரிடி பஸ் டெர்மினல் பகுதியில் திங்கள் கிழமை இன்று காலை குண்டு வெடித்தது. அங்கே, பயணிகள் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பயங்கர சத்தத்துடன் பைப் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குண்டு சரியாகக் கையாளப் படாத நிலையில் வெடித்ததால், அந்த நபர் காயமடைந்துள்ளார். அதை வைத்து அவரைக் கைது செய்த நியூயார்க் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் எவருக்கும் காயமில்லை என்றாலும் நான்கு பேர் இதில் படு காயம் அடைந்துள்ளனர். பலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது என்று நியூயார்க் நகர தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.