Asianet News TamilAsianet News Tamil

நெருப்புடன் விளையாடுகிறார்கள்! மேற்கத்திய நாடுகளில் குர்ஆன் எரிப்பு குறித்து இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

மேற்கத்திய நாடுகளில் புனித குர்ஆன் எரிக்கப்படுவது குறித்து ஈரான், துருக்கி, கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் ஐ.நா. பொதுச்சபையில் கண்டனம் தெரிவித்துள்ளன.

Playing With Fire: Islamic Leaders Slam West At UN Over Quran Burnings sgb
Author
First Published Sep 20, 2023, 8:15 AM IST | Last Updated Sep 20, 2023, 8:25 AM IST

செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய முஸ்லீம் தலைவர்கள் குரான் எரிப்பு பற்றி சம்பவங்கள் தொடர்பாக மேலை நாடுகளை கடுமையாக சாடியுள்ளனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மேலை நாடுகள் குரான் எரிப்பை அனுமதிப்தாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்படும் சம்பவங்கள் பல முறை நடந்தும் அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துக்கொள்வதுடன் நின்றுவிடுகிறது. கருத்துச் சுதந்திர சட்டத்தின் கீழ் இத்தகைய செயல்களை நிறுத்த முடியாது என்றும் கூறியிருக்கிறது.

பழிக்குப் பழி! கனடாவின் தூதரக அதிகாரி 5 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன் - துருக்கி அரசு பயங்கரவாதிகளாகக் கருதும் குர்திஷ் ஆர்வலர்களை ஸ்வீடன் தங்கள் நாட்டிற்குள் வரவேற்பது குறித்து பல மாதங்களாக அழுத்தம் கொடுத்து வருகிறார். அவர், மேற்கத்திய நாடுகள் பிளேக் போன்ற இஸ்லாமிய விரோத மனப்பான்மையுடன் உள்ளன. இப்போது அது சகிக்க முடியாத நிலையை எட்டியுள்ளது" என்று அவர் ஐ.நா பொதுச்சபையில் கூறினார்.

"துரதிர்ஷ்டவசமாக, பல நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் இதுபோன்ற ஆபத்தான போக்குகளை ஊக்குவிப்பதன் மூலம் தொடர்ந்து நெருப்புடன் விளையாடுகிறார்கள்" என்று அவர் எச்சரித்தார்.

Playing With Fire: Islamic Leaders Slam West At UN Over Quran Burnings sgb

"ஐரோப்பாவில் புனித குர்ஆனுக்கு எதிரான கொடூரமான தாக்குதல்களை, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அனுமதிப்பதன் மூலம் அதனை ஊக்குவிக்கும் மனநிலையானது, அதன் சொந்தக் கைகளால் சொந்த எதிர்காலத்தை இருளாக்குகிறது" என்று எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வீடனில் குரான் எரிப்பு சம்பந்தப்பட்ட போராட்டங்கள் அகதியான சல்வான் மோமிகாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இது அவரது சொந்த நாடான ஈராக் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

ஜூலை மாதம் எர்டோகன் நேட்டோ கூட்டமைப்பில் ஸ்வீடன் சேர்தவற்கான எதிர்ப்பை விலக்கிக்கொள்வதாக கூறினார். ஆனால் துருக்கிய பாராளுமன்றம் இன்னும் அதனை அங்கீகரிக்கவில்லை.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் ஐ.நா பொதுச்சபையில் குர்ஆனை குர்ஆன் எரிப்பை எதிர்த்துப் பேசினார். "அவமரியாதையின் நெருப்பு தெய்வீக உண்மையை வெல்லாது" என்று ரைசி கூறினார். பேச்சு சுதந்திரத்தின் மூலம் கவனத்தை திசைதிருப்ப முயல்வதாகவும் மேற்கத்திய நாடுகளை அவர் குற்றம் சாட்டினார்.

காலிஸ்தான் தலைவர் கொலைக்கு இந்தியா காரணமா? கனடா பிரதமர் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இந்தியா

பள்ளிகளில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்த பிரான்சை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய ரைசி, "இஸ்லாமிய வெறுப்பு மற்றும் கலாச்சார நிறவெறி ஆகியவை மேற்கத்திய நாடுகளில் காணப்படுகின்றன - புனித குர்ஆனை இழிவுபடுத்துவது முதல் பள்ளிகளில் ஹிஜாப் மீதான தடை வரையிலான செயல்களில் இது தெளிவாகத் தெரிகிறது - மேலும் பல இழிவான பாகுபாடுகள் மனித கண்ணியத்திற்கு உகந்தவை அல்ல" என்றார்.

Playing With Fire: Islamic Leaders Slam West At UN Over Quran Burnings sgb

கடந்த ஆண்டு, ஈரானில் ஹிஜாப் அணியாததற்காக போலிசாரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதான மஹ்சா அமினியின் மரணத்தால் அந்நாட்டுப் பெண்கள் தன்னெழுச்சியாக போராட்டங்ககள் நடத்தினர். ஆனால், ஈரான் அரசு அந்தப் போராட்டத்தை வன்முனையால் ஒடுக்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.

மேற்கத்திய நாடுகளுடனும் மற்ற இஸ்லாமிய உலக நாடுகளுடனும் நெருங்கிய உறவுகளைக் கொண்ட கத்தார் நாட்டின் சார்பில் ஐ.நா. பொதுச்சபையில் பேசிய ஷேக்  தமீம் பின் ஹமத் அல் தானி, தனது உரையில், "வேண்டுமென்றே மற்றவர்களின் புனிதங்களில் சமரசம் செய்வதுகொள்வதை கருத்து சுதந்திரமாக பார்க்கக்கூடாது" என்று கூறினார்.

"குர்ஆன் மிகவும் புனிதமானது, அறிவற்ற ஒருவரால் இழிவுபடுத்தப்படுகிறது" என்ற அவர் புனித குர்ஆனை எரிப்பதன் மூலமோ அல்லது வேறு விதமான அற்ப செயல்களின் மூலமோ திசைதிருப்பப்படுகிறோம் என எனது முஸ்லீம் சகோதரர்களிடம் கூறுவேன் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.

பிந்திரன்வாலேவுக்கு பணம் அனுப்பிய கமல்நாத், சஞ்சய் காந்தி! RAW முன்னாள் அதிகாரி பகிரங்கக் குற்றச்சாட்டு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios