விண்வெளியில் மிதந்த பீட்சா..! யார் செய்த சேட்டை தெரியுமா..? வைரல் காட்சி...
பீட்சா யாருக்குதான் பிடிக்காது...நினைக்கும் போதெல்லாம் பீட்சா சாப்பிட உடனே பீட்சா கார்னருக்கு செல்வோம் அல்லவா....
ஆனால் சர்வதேச விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகள் பீட்சா செய்து சாப்பிட்டு உள்ளார்கள் என்றால் எவ்வளவு இன்டரிஸ்டிங்கா இருக்கும் ...
விண்வெளி விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர் என்பது நமக்கே தெரிந்த ஒன்றே....பொதுவாகவே நாசா விஞ்ஞானிகள் சில நேரங்களில் புது புது வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு வருவார்கள்...
அந்த வரிசையில் தற்போது புவி ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் அவர்கள் விண்வெளி மையத்தில்.பீட்சா செய்து அதைச் சாப்பிடும் வீடியோவை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
விஞ்ஞானிகள் விண்வெளியில் பீட்சா செய்த வீடியோ தான் தற்போது உலக அளவில் வைரலாக பரவி வருகிறது
விண்வெளியில் அந்த பீட்சா பறக்கும் காட்சியை பார்க்கும் போது,அதாவது மிதக்கும் பீட்சாவும் அதனை எட்டி பிடித்து விஞ்ஞானிகள் சாப்பிடும் அந்த காட்சி மிகவும் அழகாக உள்ளது