ஆஸ்திரேலியாவின் அருகே உள்ளது தாஸ்மானியா தீவு. இந்த தீவிற்கு டேவோன்போர்ட் என்ற பகுதியில் இருந்து Piper PA-31 என்ற சிறிய வகை விமானம் மூலம் ஒருவர் அந்த பகுதிக்கு சென்றார்.

இந்த வகை விமானத்தில் ஒருவர் மட்டுமே தாரளமாக அமரும் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தனி ஒரு ஆளாய் தானே இயக்கி பயணம் செய்த அந்த விமானி திடீரென அசந்து தூங்கி உள்ளார்...

ஒரு பத்து நிமிடம் தாமதம் ஆகவே, அவர் இறங்க வேண்டிய இடம் தாண்டி சுமார் 50 km தூரம் சென்று உள்ளார். உடனே சுதாரித்துகொண்ட அவர், மீண்டும் அந்த சிறிய வகை விமானத்தை திசை திருப்பி சரியான இடத்தை  வந்து அடைந்து உள்ளார். இதையடுத்து அந்த விமானியிடம் ஆஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு துறையினர் விளக்கம் கேட்டு உள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு இதே ஓடுதளத்தில், விமான விபத்து ஏற்பட்டு ஐந்து பேர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ அதிர்ஷ்டவசமாக இவர் எந்த விபத்தும் எற்படாமல் உயிர் பிழைத்தார்.