தொடரும் ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்..! கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

petrol and diesel rate increases continuously

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

petrol and diesel rate increases continuously

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 5 காசுகள் உயர்ந்து 78.69 ரூபாயாக இருக்கிறது. தொடர்ந்து ஆறாவது நாளாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல 1 லிட்டர் டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து 72.69 ரூபாயாக விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

petrol and diesel rate increases continuously

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்விற்கு, அமெரிக்கா-ஈரான் இடையே நிகழ்ந்து வரும் மோதல் போக்கே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை அமெரிக்கா வான் தாக்குதல்படை பாக்தாத்தில் வைத்து அதிரடியாக சுட்டுக்கொன்றது. அவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதமாக அதிகரித்தது. தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றம் நீடித்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரக்கூடும் என எதிரிக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios