பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் உடல்நிலை கவலைக்கிடம்!

துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் உடல்நிலை கவலை அளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர
 

Pervez Musharraf critical: Former Pakistan president admitted to UAE hospital

துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் உடல்நிலை கவலை அளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோசமான உடல்நிலை காரணமாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (74) வயது, இவர் கடந்த 1999 முதல் 2008-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.

பர்வேஸ் முஷரப் அதிபராக இருந்தபோது, ஜனநாயகப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானை ராணுவ ஆட்சிக்கு மடைமாற்றி சர்வதேச அரங்கை தன் பாக்கம் திரும்பிபார்க்க வைத்தார். ராணுவ ஆட்சியை கொண்டுவந்து பாகிஸ்தான் அரசியல் வரலாற்றையே மாற்றிப்போட்டார் முஷரப், ஒரு சர்வாதிகாரி போல அப்போது அவர் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இப்போதும் உள்ளது. ராணுவ தளபதியான அவர் திடீரென நாட்டை கைப்பற்றி ஆண்டு வந்த நிலையில் ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்து அதில் படுதோல்வி கண்டார் . இவர் பதிவியில் இருந்த போது 2007 ஆம் ஆண்டு திடீரென அவரநிலை பிரகடணம் செய்யப்பட்டது, அப்போது சும்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை வீட்டுக்காவலில் வைத்தார்.

100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார். மிரட்டலாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய முஷரப் தேர்தல் தோல்விக்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் போனார். பதவியில் இருந்தபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்பதற்காக அவர் மீது தேச துரோகம் வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அதில் இருந்து தப்பிக்க வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை பாகிஸ்தானில் சிறப்பு நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது . ஆனால் அந்த வழக்கில் ஆஜராகாமல் அவர் தள்ளிப்போட்டு வந்தார்.

அதை தொடர்ந்து மு‌ஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை முடக்கி வைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதனால் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள முடியாது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. என்ற நிலையில் வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்தார் முஸ்ரப். இந்நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். .

இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர உயிர்காக்கும் மருத்துவ உபகரணம் கொண்டு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios