flood in pakistan: பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!வெள்ளத்தால் 2% ஜிடிபியைக் காணோம்! 3000 கோடி டாலர் இழப்பு
பாகிஸ்தானில் பெய்த கனமழை அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், அந்நாட்டுக்கு 3ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்றும், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
பாகிஸ்தானில் பெய்த கனமழை அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், அந்நாட்டுக்கு 3ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்றும், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
பாகிஸ்தானல் இதுவரை இல்லாத அளவு கடந்த ஜூன் மாதம் பிற்பகுதியில் தொடங்க பருவமழை வெளுத்து வாங்கியது. பலூசிஸ்தான், சிந்து மாகாணங்களில் ஏற்பட்ட மழையால் ஆறுகளிலும், நதிகளிலும் ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது.
death of queen elizabeth: ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பங்கேற்பு
இதுவரை மழை வெள்ளத்துக்கு 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடைமைகளை இழந்துள்ளனர், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளார். மூன்றில் ஒருபகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறையும் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய வெள்ள மீட்பு மற்றும்ஒத்துழைப்பு மையத்தின் மேஜர் ஜெனரல் ஜாபர் இக்பால், பிரதமர் ஷேபாஸ் ஷரீப் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் ஆகியோர் கூட்டாகப் பேட்டியளித்தனர்.
300 வைரங்களுடன் ஜொலித்த இந்திய நெக்லஸ்: ராணி எலிசபெத்துக்கு ஹைதராபாத் நிஜாம்வழங்கிய பரிசு
அவர்கள் கூறுகையில் “ பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஒட்டுமொத்தமாக 3000 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மூன்றில் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறையும். வெள்ள பாதிப்பு, ஐஎம்எப் நிதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், உக்ரைன் போர் ஆகிய ஒட்டுமொத்த காரணிகளில் பொருளாதார வளர்ச்சி குறையும்.
கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். ” எனத் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் மிதக்கும் பாகிஸ்தான்! மூன்றில் ஒருபகுதி நீரில் மூழ்கியது
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 17 லட்சம் வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளன. 6,600 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளன, 269 பாலங்கள் சேதமடைந்துள்ளன என்று பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
பலூசிஸ்தானில் 32 மாவட்டங்கள், சிந்து மாகாணத்தில் 23 மாவட்டங்கள், கைபர் பக்துன்கவாவில் 17 மாவட்டங்கள் எனமொத்தம் 81 மாவட்டங்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் உள்ளன.
பாகிஸ்தான் வெள்ளத்தால், 8.25 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பருத்தி, நெல், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும்நீரில் மூழ்கிவிட்டன.
ஏற்கெனவே பாகிஸ்தான் பொருளதாரம் பாதாளத்துக்குச் சென்று சர்வதேச செலாவணி நிதியத்திடம் உதவி பெற்றுள்ளது. இப்போது வெள்ளத்தால் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகக் குறையும்போது, அதன் பாதிப்பு இன்னும் மோசமாக இருக்கும்.